Saturday, 2 August 2014

19. கங்கா விசர்ஜன மூர்த்தி

19. கங்கா விசர்ஜன மூர்த்தி

சகரன் எனும் அரசன் அயோத்தி நகரை ஆண்டுவந்தான். அவன் அஸ்வமேத யாகம் செய்ய ஒரு  குதிரையைக் கொணர்ந்தான். அக்குதிரை  இருந்தால்  தானே யாகம் நடைபெறும் அதைத் தடுக்க வேண்டி குதிரையை பாதாளத்தில் கபில முனிவர் அருகே கட்டி வைத்தான்அயோத்தி மன்னன் குதிரையைத்தேடி கொண்டுவரும் படி தமது அறுபதினாயிரம் மக்களையும் பணிந்தார். பாதாளத்தில் முனிவர் அருகே குதிரைக் கண்ட அவர்கள்  முனிவரே  கள்வன் என முடிவு கட்டினர். உடன் முனிவர்  கண்விழிக்க, அனைவரும் சாம்பலானாகள். இச் செய்தி கேள்விப்பட்ட மன்னன் தன் மகன் அஞ்சுமானை அனுப்பினார். அஞ்சுமானும் கபிலரிடம் சென்று உண்மையைக் கூறி குதிரையை மீட்டு தன் தந்தையின் யாகம் நிøவேற உதவினான்அவனது வம்சாவளியிலே வந்தவனே பகிரதன் ஆவான். அவன் தனது முன்னோர்க்கு ஏற்பட்ட நிலையை எண்ணி நான்முகனை நோக்கி தவமிருந்தான். நான்முகன் தோன்றி கங்கையால் உன் முன்னோர்கள்  மோட்சமடைவர் எவனே  சிவனை நோக்கி தவமிக்க சொல்லி மறைந்தார். சிவனை நோக்கி தவமிருந்தான் பகிரதன்.

சிவபெருமான் கேட்ட வரம் கொடுத்தார். பின் கங்கையை நோக்கி தவமிருந்தான். கங்கையோ தன்னை அடக்க சிவபெருமானால் மட்டுமே முடியும் எனவே மறுபடியும் சிவனை நோக்கி தவமியற்றும் படி கூறினார். மறுபடியும் சிவன் கேட்ட வரம் கொடுத்தார், உடன் கங்கை வந்தார். சிவபெருமான் அவரை  அடக்கும் பொருட்டு தனது தலை முடியில்  அணிந்தார். இதனையறியா பகிரதன் பதறினார்பின் சிவபெருமான் தன் தலை முடியில் இருந்த கங்கையில் இருந்து சிலதுளிகள் பகிரதன் கைகளில் விட்டார். அந்த சில துளிகளும்  வேகத்துடன் வந்து ஐந்து முனிவர்கள் இயற்றிய யாகத்தை அழித்தது, அதனால் அம்முனிவர்கள்  கங்கையை தம் உள்ளங்கையில் வாங்கி உட்கொண்டனர்பகிரதன் கங்கையைக் காணாது திகைத்தான். பின் முனிவர்களை வணங்கி நடந்ததைச் சொல்லி கங்கையைத் திருப்பிதர வேண்டினான். அம்முனிவர்களும் இசைந்து தம் செவி வழியாக விட்டனர். அதனால் கங்கைக்கு ஜானவி என்ற பெயர் ஏற்பட்டது. பகிரதன்  கங்கையை  தம் முன்னோர்களின் சாம்பல் மீது தெளிக்க  அவர்கள் சொர்க்கம் அடைந்தனர்.


பகிரதன் கொண்டு வந்ததால் கங்கைக்கு பகீரதி என்ற பெயர் ஏற்பட்டது. கங்கையை தனது சடையில் ஏற்று வழிபாட்டிற்கே சிறு துளி  கொடுத்து வழி காட்டியதால் சிவபெருமானுக்கு  கங்கா விசர்ஜன மூர்த்தி  என்ற பெயர்  ஏற்பட்டதுஅவரை தரிசிக்க கேதார் நாத் செல்ல வேண்டும். ஆறு மாத காலம் கோயிலில்  வழிபாடுகள் நடைபெறும்.   பனிமழையால்  ஆறுமாதம் மூடப்பட்டிருக்கும்உமை  சிவனிடம் இடபாகம் பெற்ற தலமே  கோதார்நாத்  ஆகும்இங்கு கோயில் கொண்டுள்ள கோதாரேஸ்வரரை வணங்கி  அங்குள்ள  புனித நீரை வீட்டில் நடைபெறும்  சுபகாரியங்களுக்கு   பயன்படுத்தினால்  சுபமாகும். வெண்தாமரை  அர்ச்சனையும்எள்ளோதரை நைவேத்தியமும்  அமாவாசை, திங்கள் கிழமைகளில்  செய்தோமானால்  பிதுர் தோஷம்  சரியாகும். அவர்கள் சொர்க்கம் செல்வர்மேலும் இங்கிருந்து கொண்டு செல்லும் நீரை வெள்ளிக்கலசத்தில்  வைத்து பூஜிக்க குபேர சம்பத்து கிட்டும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer