Saturday, 2 August 2014

6. உமா மகேச மூர்த்தி

6. உமா மகேச மூர்த்தி

திருக்கைலையில்  பொன்னும் மணியும் சேர்ந்து அமைந்த ஆசனத்தில் சிவபெருமான் தமது தேவியுடன் எழுந்தருளியுள்ளார். சிவபெருமானே உலக உயிர்கள் அனைத்திற்கும்  தந்தையாவார். அதுபோல உமாதேவியே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்குமே  அன்னையாக விளங்குபவள். அவர் தன்னுடைய  இறைவனாகிய  சிவபெருமானின் என்னப்படியே  அனைத்துச்  செயல்களையும்  செய்து வருகின்றார்பூவிலிருந்து மணத்தையும், நெருப்பிலிருந்து  புகையையும் எப்படி பிரிக்க முடியாதோ  அதுபோல் இவர் சிவத்திடம்  ஐக்கியமானவராவர். கருணையே வடிவான இவர்  ஐவகை செயல்களுக்காய் ஐவகை பேதங்களாக மாறியுள்ளார்முறையே

1. பராசக்தி- இவர் பரமசிவத்திலிருந்து 1001 கூறு கொண்டவர்.
2. ஆதிசக்தி - பராசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
3. இச்சா சக்தி - ஆதிசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
4. ஞானசக்தி - இச்சா சக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
5. கிரியாசக்தி - ஞானசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.


இதில் பராசக்தி பக்குவமடைந்த  ஆன்மாக்களை அனுக்கிரகிக்கிறவள். ஆதிசக்தி நம்மிடமுள்ள ஆணவங்களைப் போக்கி பக்குவ நிலையைக் கொசடுப்பவர். ஞானசக்தி ஞானத்தை ஊட்டி நம்மிடம் ஞானத்தை ஒளிரும் படி செய்பவர். இச்சா சக்தி  திருஷ்டித் தொழில் செய்து நம்மை  சிருஷ்டிப்பவர்கிரியாசக்தி  உலகப் படைப்பை செய்பவர்மேற்க்கண்ட  இந்த  ஐந்து சக்திகளும்  ஒன்றினைந்து  ஒரு செயல்  செய்யும் போது  ஒன்றாகி  சதாசிவமூர்த்தியாகி  விடுகின்றதுஎனவே  சிவன் - சக்தி பிரிக்க முடியாத  ஒன்று. இத்தகைய   சிறப்பு வாய்ந்த   உமா மகேஸ்வர மூர்த்தியை  நாம் தரிசிக்க வேண்டிய தலம் கும்பகோணம் அருகேயுள்ள  கோனேரி ராஜபுரம் தான் செல்ல வேண்டும். இங்கு கோயில் கொண்ட மூர்த்தியே  உமாமகேஸ்வரர் ஆவார்இறைவி பெயர்  தேகசௌந்தரி என்பதாகும். இங்குள்ள தீர்த்தத்தில்  நீராடி இறைவி, இறைவனுக்கு  இளநீர், பால், தேன் அபிசேகம் செய்ய  கடுமையான  குஷ்ட நோயும் தீரும். இத்தல இறைவனின்  மற்றொரு திருநாமம்       பூமிநாதர்  என்பதாகும்பெயர்க்கேற்றார் போல் எந்த ஒரு தொழில் செய்யும் முன்பும்  இந்த பூமிநாதரை வணங்கி  இங்கிருந்து ஒரு பிடி மண் கொண்டு வந்து தொழில் செய்யும் இடத்தில் வைத்தால்  தொழில்  சிறப்படையும்புதன் தோறும்  சிவப்பு அல்லிப்பூவால் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் செய்து வழிபட்டால் குடும்ப வாழ்வில் எந்தவொரு பிரச்சனையும் வராது. இருந்தாலும் விலகும்.இங்குள்ள மண்ணால் வினாயகர் செய்து நம் வீட்டில் வைத்து வழிபட எந்தவொரு காரியத்தடையும்  அகலும்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer