Saturday 2 August 2014

45. கிராத மூர்த்தி (வேட மூர்த்தி)

45. கிராத மூர்த்தி (வேட மூர்த்தி)


பாரதப் போரில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்க் கொண்டிருந்தனர். அங்கே அவர்களின் குகைளை கேட்கவும், ஆலோசனைக் கூறவும், மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றிப் பேசவும் வியாசமுனிவர் கானகம் சென்றார். அங்கே பலவாராக இன்னல்பட்டுக் கொண்டிருந்த பாண்டவர்களுக்கு தேவையான ஆலோசனைகளைச் சொல்லியபடி வந்தார். அப்போது கௌரவர்களைப் போரில் வெல்வதற்கு வேண்டிய சக்திவாய்ந்த அஸ்திரத்தைப் பெற சிவபெருமானை நோக்கி தவமியற்றச் சொன்னார். அவரது வாக்குப்படியே குறிப்பிட்ட நல்லநாளில் தவம் செய்வதற்கு ஏற்ற உடையுடன், பொருளுடன் அர்ச்சுனன் வெள்ளி மலையை அடைந்தான். அங்கே வசிக்கும் முனிவர், ரிஷிகள், தேவகணத்தினரின் ஆசியுடன் அங்கு சிவபெருமானை மனதில் நினைத்து, வெந்நீரணிந்து இருகைகூப்பி, ஒரு காலை மடித்து நின்றவாறு தவம் செய்யலானான். அர்ச்சுனனின் தவத்தை சோதிக்க இந்திரன் விரும்பினான். ஆகவே தேவலோக நாட்டியக் கன்னிகளை அனுப்பி தவத்தைக் கலைக்கும்படி செய்தான். அவர்கள் அர்ச்சுனன் முன்பு பலவித நாட்டியமாடியும் தவம் கலையவில்லை.

தேவகணங்கள் மூலம் அர்ச்சுனனின் தவத்தை அறிந்த பார்வதிதேவி சிவபெருமானிடம் கூறினார். அப்போது சிவபெருமான் வேடராகவும், பார்வதி தேவி வேடுவச்சியாகவும், முருகன் குழந்தையாகவும், வேதங்கள் நான்கும் வேட்டை நாய்களாகவும், தேவகணங்கள் வேட்டுவக் கூட்டமாகவும் மாறியது. அர்ச்சுனன் தவம் செய்யும் இடத்தை அடைந்தனர். அங்கே அர்ச்சுனனின் தவத்தை கலைக்க முகாசுரன் பன்றியாக மாறி வேகமாக வந்தான். இதனைக்கண்ட சிவபெருமானும் பன்றி மீது அம்புவிட, அர்ச்சுனனும் பன்றி மீது அம்புவிட இதனால் தேவகணங்களாக வேட்டுவக் கூட்டத்தினர் ஒருவர் கொன்ற மிருகத்தை மற்றொருவர் சொந்தம் கொள்வதாகாது என்றனர். இதனால் வாய்ச்சண்டை முற்றியது. அர்ச்சுனனின் வில்லின் நாணை சிவபெருமான் அறுத்தார். பதிலுக்கு வில்லால் சிவனை அடித்தான் அர்ச்சுனன். அவ்வடி உலகஉயிர்கள் அனைத்தின் மீதும் பட்டது. உடன் சிவபெருமான் தம்பதி சமேதராய் காட்சிக் கொடுத்தார். அதற்கு பின் அஸ்திரத்தையும் (பாசுபதம்) பெற்றான், அர்ச்சுனனின் தவத்திற்கு இடையூரான முகாசுரனைக் கொல்ல சிவபெருமான் ஏற்ற வடிவமே "கிராத மூர்த்தி யாகும்.


குடவாசல் அருகே அமைந்துள்ள தலம் திருக்கொள்ளம் புதூர் ஆகும். அவ்வூரில் இத்தலத்தை "நம்பர் கோயில் என்றழைக்கின்றனர். இறைவன் பெயர் "வில்வாரண்யேஸ்வரர் இறைவி பெயர் அழகு நாச்சியார். இங்குள்ள அகத்திய தீர்த்தத்தில் நீராடி வில்லார்ச்சனை செய்ய பகையை எதிர் கொள்ளும் ஆற்றல் வரும். மே<<லும் செவ்வரளி அர்ச்சனையும், வெண்பொங்கல் அல்லது மிளகு அடை நைவேத்தியமும் செவ்வாய் அன்றுக் கொடுக்க பகைமை மறந்து நண்பராகும் பேறும், சொத்துச் சண்டையும் முடிவிற்கு வரும்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer