20. திரிபுராந்தக
மூர்த்தி
தாரகாசுரனின்
மூன்று
மகன்களும்
நான்முகனை
நோக்கி
நெடுங்காலம்
தவமியற்றி
வந்தனர்.
நான்முகனும்
காட்சிக்
கொடுத்தார்
உடன் அவர்கள் என்றும் அழியாத
வரம் வேண்டும் என்றனர். உடன் நான்முகனோ அது முடியாத காரியம்
அனைவரும்
அனைவரும்
ஒரு நாள் அழிந்தே
தீருவோம். எனவே
மோட்சமாவது கேளுங்கள்
கிடைக்கும்.
இவ்வுலகில்
என்றும்
அழியாமல்
இருப்பவர்
சிவபெருமான்
மட்டுமே
என்றார்.
உடனே அம்மூவரும் அப்படியானால் பொன்,
வெள்ளி,
இரும்பினால் ஆன
சுவருடைய முப்புரம்
வேண்டும்.
அவை நாங்கள் நினைத்த இடத்திற்கு மாற வேண்டும்.
அவற்றை
எங்களையும்
சிவபெருமான்
தவிர வேறொருவர் அழிக்க முடியாத வரத்தை கேட்டனர். நான்முகனும்
கொடுத்து
விட்டு
மறைந்தார்.
அம்மூவரும்
தங்கள்
சுயரூபத்தை
சிவனிடம்
காட்டாமல் மற்ற
அனைவரிடத்திலும் காட்டினர்.
தேவர்கள்
அவர்களது
தொல்லை
தாளாமல் திருமாலிடமும்,
இந்திரனிடமும்
முறையிட,
அவர்கள்
அசுரர்களிடம் தோற்று
திரும்பினர்.
பின்னர்
சிவனை
நோக்கி
தவமிருந்தனர்.
சிவபெருமான்
அவர்கள் தமது
அடியார் எனவேக்
கொல்ல
முடியாது
என்றார். மீண்டும்
கடுமையான
தவத்தை திருமால்,
இந்திரன்,
நரதர்
மேற்க்கொண்டனர். உடன்
சிவபெருமான் அப்படியானால் தேர்
முதலான
பேர் கருவிகளைத் தயார் செய்யும் படி தேவர்களிடம் கூறினார்.
தேவர்களும்
அவ்வாறே
தயார்
செய்தனர். தேரில்
மந்திர
மலையை
அச்சாகவும், சந்திர,
சூரியர்
சக்கரமாகவும்,
நதிகள்
தேர்க்
கொடியாகவும்,
அஷ்டபர்வதங்கள்
தேரின்
தூண்களாகவும்,
புண்ணிய
நதிகள்
சாமரம்
வீசவும்,
தேவகணத்தினர்
வாத்தியங்கள்
இசைத்தப்படி உடன்
வர தேர் தயாரானது. சிவபெருமான்
பார்வதியுடன் இடபவாகணத்தில் இருந்து
தேரில்
கால் எடுத்து வைத்தவுடன் தேரின்
அச்சு
முறிந்தது.
உடன் இடபமாக மாறி திருமால் தேரைத் தாங்கினார்.
ஆனாலும்
தேர் மேலும் சாய அனைவரும்
முதற்கடவுளை
வேண்ட, தேர்
பழைய படி சரியானது. பின் தேவகணங்கள்
படைசூழ,
இந்திரன்,
திருமால்,
முருகன், வினாயகன்
என அனைவரும் தங்களது வாகனம் ஏறி முடிவில்
அனைவரின் எண்ணப்படி
மேருமலையை
வில்லாகக்
கொண்டு,
வாசுகியை
அம்பாகக் கொண்டு
நாணேற்றினார்.
பின் திடிரென அவற்றை வைத்து விட்டு முப்புறங்களையும் பார்த்து
ஒரு புன்னகைப் புரிந்தார். முப்புறங்களும் எரிந்து
சாம்பலாயின.
உடன்
அசுரர்கள்
மூவரும்
( தாரகாட்சன்,
கமலாட்சன்,
வித்யுன்மாலி)
சிவபெருமானிடம்
மன்னிப்புப்
கேட்க.
அவரும் அவர்களை
மன்னித்து
துவார
பாலகராக
வைத்துக்
கொண்டார்.
தேவர்களின் துயர்துடைத்து
முப்புரங்களையும்
எரித்ததால் சிவபெருமானுக்கு திரிபு
ராந்தக
மூர்த்தி என்னும்
பெயர்
ஏற்பட்டது. இவரை
தரிசிக்க
நாம் செல்ல வேணடிய தலம் கடலூரில் உள்ள
திருஅதிகையாகும்.
இங்குள்ள
இறைவன் பெயர் திரிபுராந்தக மூர்த்தி, அதிகைநாதர் என்பதும், இறைவி பெயர்
திரிபுரசுந்தரியாகும்.
இவர்க்கு
கெடில நதியால் அபிசேகமும் வில்வார்ச்சனையும்
செய்ய
பகைவர்
பகை ஒழிந்து நண்பராவார்கள்.
சூலை நோய் இருப்பின்
இந்த சுவாமியை வழிபட நோய்
குறைந்து உடல்
நலம் சீராகும். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு திருமஞ்சனத்தூள் அபிசேகம் செய்ய எவ்வகை நோயும்
குணமடையும்
என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment