Wednesday 14 January 2015

அமர்ந்த ஏகபாத ஆசனம்

அமர்ந்த ஏகபாத ஆசனம்


முனிவர்கள் அருளிய ஆயிரக்கணக்கான ஆசன வகைகள் நடைமுறையில் இருந்தும் உடலை வலுப்படுத்தும் ஆசனங்கள் மட்டுமே அதிகமாக கற்பிக்கப்படுகின்றன. ஆனால் ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரம் வெளிப்படுத்தும் மருந்துகளால் குணப்படுத்தமுடியாத நோய்களை நிரந்தரமாக நீக்கும் சஞ்சீவி ஆசனங்களாகும். விரிப்பில் சம்மணமிட்டு அமர்ந்து, விழிகளை திறந்து மூச்சை இயல்பாக விடவும். பிறகு சம்மண நிலையிலிருந்து கால்களை பிரிந்து, வலது காலை அமர்ந்த நிலையில் உள்பக்கம் மடித்து, இடது கால் பாதத்தை கழுத்தின் பின்னால் பிடரியில் படும்படி வைக்கவும். இருகைகளை நெஞ்சருகே வணங்கிய நிலையில் வைக்கவும். இந்த ஆசனம் செய்யும் போது நமது எண்ணத்தை முதுகு தண்டெலும்பில் கீழிருந்து மேல் நோக்கியிருக்கும்படி செய்யவும். அடுத்து இடக்கால் நிலையை வலது காலுக்கும், வலது கால் நிலையை இடது காலுக்கும் மாற்றி செய்யலாம்.


பலன் : இடுப்பு, முழங்கால் பந்து கிண்ணங்கள், அவைகளை இணைக்கும் தசை நார்கள், ரத்தக்குழாய்கள் சீரடைகிறது. முதுகெலும்பு வளையங்களின் இடையே உள்ள ஜவ்வுப்பகுதி சீரடைகிறது. சர்க்கரை நோயாளிகள் பாதம், கால் விரல்களின் பாதிப்பு குறைகிறது. மாலை நேரங்களில் 15 நிமிடம் செய்வது ஏற்றது. எவ்வித அறுவை சிகிச்சை செய்தவர்களும் 6 மாத காலத்திற்கு பின் இந்த பயிற்சியை செய்யலாம்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer