Wednesday 14 January 2015

கூர்மாசனம்

கூர்மாசனம்


விரிப்பின் மீது அமர்ந்த நிலையில் முழங்காலை மடித்து இருகால்களின் அடிப்பாகம், ஒன்றுக்கொன்று எதிராக சுமார் பத்து அங்குல இடைவெளி இருக்கும்படி கொண்டு வரவும், அவ்விடைவெளியில் முகத்தை புதைத்து நெற்றியை தரையில் பதித்தபடி, இரு கைகளை நீட்டி வணங்கியபடி கைகளை தரைமீது பரவச் செய்யவும். இவ்வாறு நிமிர்ந்த நிலையிலிருந்து குனியும் போது மூச்சை உள்ளிழுக்கவும். இந்த நிலையில் 10 வினாடிகள் கழித்து மெதுவாக கூப்பிய கைகளோடு நிமிரவும். நிமிரும் போது மூச்சை வெளிவிட்டபடி அமர்ந்த நிலைக்கு வந்து கைகளை பிரித்து பக்கவாட்டில் கொண்டு வரவும். குனியும் போது முதுகுத்தண்டின் கீழே (நுனிபாகத்தை) யும், நிமிரும் போது புருவ மத்தியிலும் நினைவை செலுத்தவும். இரண்டு முறை இந்த ஆசனத்தை 2 நிமிட இடைவெளி விட்டு செய்யவும்.


பலன்கள் : மன அமைதி கிடைக்கும். இடுப்பு எலும்பு, முதுகுத்தண்டு எலும்பு, கழுத்தெலும்பு சம்பந்தப்பட்ட வலி நீங்கும் ரத்தத்தில் சிகப்பணுக்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் குறைந்து, குழந்தை பாக்கியம் கிடைக்க செய்யும்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer