புஜ பாத பீடாசனம்
விரிப்பின்
மீது மல்லாந்து படுத்து, இரு கால்களை முட்டி
வரை குத்துக்காலிட்டு மடக்கவும். தலை, கழுத்து, தோள்,
பாதங்கள் தரையிலிருக்கும் படி செய்யவும். இடுப்பு,
முதுகு, இருதொடைகள் உயர்த்தி, கைகளால் இடுப்பை தாங்கி
கொள்ளவும். காலை வேளையில் இயல்பான
மூச்சுடன் இரண்டு தடவை 15 வினாடிகள்
செய்யவும்.
பலன் :
அதிக உடல் எடை கொண்டவர்களும்,
தொடர்ந்து வாகனம் ஓட்டுபவர்களும், ஒரே
இடத்தில் உட்கார்ந்து பணிபுரிபவர்களும் இதை செய்யலாம். இதனால்
ஏற்படும் இடுப்பெலும்பு தேய்மானம். முதுகு தண்டு எலும்பு
தேய்மானம், அதனால் ஏற்படும் வலி
ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு தரும். இந்த ஆசனம்
செய்து வந்தால் கழுத்துப்பட்டை மற்றும்
இடுப்பு பட்டை அணிவதிலிருந்து விடுதலை
கிடைக்கும்.
No comments:
Post a Comment