சுப்த வஜ்ராசனம்
மனம் :
தொடைப்பகுதி
மூச்சின்
கவனம்: சாயும்போது வெளிமூச்சு. ஆசனத்தின் போது இயல்பான மூச்சு,
நிமிரும் போது உள்மூச்சு
உடல் ரீதியான பலன்கள்: முதுகுத்தண்டு,
வயிற்று புற உறுப்புகள், இடுப்புப்பகுதி
நன்கு நீட்டப்பட்டு உரம் பெறுகின்றது. கூன்
முதுகு நிமிரும். தொடை புட்டப்பகுதி நல்ல
இரத்த ஓட்டம் பெறுகின்றது. தொடை
மற்றும் காலின் விறைப்பு மற்றும்
கடினத்தன்மையினை குறைக்கிறது. இடுப்பு கணுக்கால், கீழ்முதுகு
ஆகியவை நல்ல இயக்கத்திற்குத் தயாராகும்.
குணமாகும்
நோய்கள்: வெகு நேரம் நின்று
கொண்டு வேலை செய்பவர்களுக்கு இந்த
ஆசனம் மிக நல்லது. வாயுத்தொல்லை
நீங்கும். மலச்சிக்கல் நீங்கும்.
ஆன்மீக
பலன்கள்: முதுகெலும்பின் அடிப்பகுதியில் மறைந்து இருக்கும் ஆற்றல்கள்
செயல்படத் தொடங்குகின்றன. தொடர்ந்த பயிற்சியினால் ஓய்வு ஆழமானதாகின்றது.
எச்சரிக்கை:
கழுத்துப் பிடிப்புள்ளவர்கள் இதயக்கோளாறு உள்ளவர்கள் இதை செய்யக்கூடாது.
No comments:
Post a Comment