Wednesday, 14 January 2015

அர்த்த மச்சேந்திராசனம்

அர்த்த மச்சேந்திராசனம்


விரிப்பில் கால்களை நீட்டியவாறு அமரவும். பின்பு வலது காலை உள்பக்கமாக மடித்து, உட்காரும் பாகத்தருகே பாதத்தை வைத்து கொள்ளவும். இடது காலை மேல்புறமாக மடித்து குத்திட்ட நிலையில் பாதத்தை வலத்தொடையில் வெளிப்புறம் தரையில் பதிக்கவும். இடது முழங்கால் நெஞ்சை ஒட்டியபடி இருக்குமாறும், வலது கையை  மடித்து நிறுத்தியுள்ள காலின் உள்வழியாக இடது முட்டியை பிடித்தும், இடது கை முதுகைத் தொட்டும் இருக்க வேண்டும்.


ஒட்டு மொத்தமாக இடுப்பு, முதுகு, தோள்பட்டைகள், தலை, கழுத்து, முதலிய உறுப்புகள் இடது புறம் முறுக்கிய படி பார்வையை நேராக செலுத்தியபடி பத்து விநாடிகள் இந்த ஆசனத்தில் இருக்க வேண்டும். முதுகுத்தண்டு திருகப்படுவதால் உடற்சக்கரங்கள் தூண்டுதல் அடைகிறதுவிறைத்த முதுகுத்தண்டு நெகிழும் தன்மையாவதால் முகுள நீர் அழுத்தம் சீர் அடைகிறது. உடல் பருமன் குறையும். மன அழுத்தம் சீரடையும். சிறுநீரக கோளாறு நீங்கும். மொத்தத்தில் உடல், மனம் இரண்டையும் செம்மையாக்கும் அரிய வகை ஆசனம்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer