சித்த பத்மாசனம்
இந்த உலகில் என்ன தான்
விஞ்ஞானம் முன்னேறினாலும் நமது உடல், மன
இயக்கங்களில் சக்தியை ஒரு சேர
அதிகரிக்க ரிஷிகள் கூறிய யோகாசன
பயிற்சி முறைகளை தான் பின்பற்றுகிறோம்.
அவ்வழியில் நாமும் யோகம்+ஆசனம்
என இருவித பயிற்சிகளை ஒருசேரப்
பெறுவோம். நலமுடன் வாழ்வோம்.
யோகாசனம்
செய்யும் முன் தெரிந்து கொள்ள
வேண்டிய முக்கிய விஷயங்கள் :
தடித்த
அதே சமயம் மிருதுவான துணி
விரிப்பில் அமர்ந்து யோகாசனம் செய்வது நலம். மஞ்சள்
காமாலை போன்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
3 மாத காலத்திற்கு பின்னும், உடலில் எந்த பாகத்தில்
அறுவை சிகிச்சை செய்திருப்பவர்கள் 6 மாத காலத்திற்கு பின்னும்
பயிற்சி செய்ய வேண்டும். பெண்களைப்
பொறுத்த வரை மாதவிடாய் காலத்திலும்,
கர்ப்பம் தரித்த காலங்களிலும் பயிற்சி
மேற்கொள்ளக்கூடாது. முதலில் சித்த பத்மாசனம்
பற்றி தெரிந்து கொள்வோம்.
செய்முறை
: முதுகை வளைக்காமல், தலை நிமிர்ந்து அமர்ந்து
கழுத்தை நேராக வைத்துக் கொள்ளவும்.
வலது காலை மடித்து இடது
தொடைமீதும், இடது காலை மடித்து
வலது தொடைமீதும் வைக்கவும். இடது கையின் மேல்
வலது கையை திறந்த நிலையில்
மேல் நோக்கி வைக்கவும், கண்களை
மெதுவாக மூடி அதன் பார்வை
மையம் இரு புருவங்களுக்கு மத்தியில்
இருக்க வேண்டும். ஒரே சீராக நிமிடத்திற்கு
14 முதல் 16 தடவை மூச்சை இழுத்து
விடவும். இந்த பயிற்சியை காலை
6 மற்றும் மாலை 6 மணியளவில் குறைந்தது
15 நிமிடம் முதல் ஒரு மணி
நேரம் வரை செய்யலாம். வெறும்
வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர்
அருந்தி கொண்டு பயிற்சி செய்வது
நலம்.
பலன் :
ரத்த ஓட்டம் சீராக அமையும்,
மன அமைதி கிடைக்கும்.
No comments:
Post a Comment