Wednesday, 14 January 2015

பரிவ்ருத்த திரிகோணாசனம்

பரிவ்ருத்த திரிகோணாசனம்


மனம் : இடுப்பு பகுதி மற்றும் கைகள்

மூச்சின் கவனம் : குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு

உடல் ரீதியான பலன்கள்: முதுகுத்தண்டு முழுவதையும் இது நீட்டி அதை ஆரோக்கியமாக வைக்கிறது. வயிற்றுப்புறத்தில் உள்ள பெரும்பான்மையான உள்ளுறுப்புகள் நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப்படுகின்றன. முதுகுத்தண்டு, இடுப்பு, இடுப்பின் கீழ்பகுதி ஆகியவற்றின் வளையும் தன்மையினை அதிகரிக்கின்றது. வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு கரைக்கப்பட்டு இடுப்புப் பகுதியினை மெலிதாக்குகிறது. முதுகுத் தண்டு சுழற்றப்படுகின்றது. சிறுநீரகங்கள் உரம் பெறுகின்றன. உடல் இலேசாக, புத்துணர்வாக, ஓய்வாக உணர்கிறது. இரத்த ஓட்டம் நன்கு பாய்வது உணரப்படுகிறது.

குணமாகும் நோய்கள் : பெரும்பான்மையான வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது. இடுப்பு, மூட்டு தோள்பட்டை, கணுக்கால்கள் ஆகியவற்றின் பிடிப்பு நீங்குகிறது. உடம்புப் பகுதியில் உள்ள தசைகளை இறுக்க தன்மை நீங்கி தளர்கிறது.


எச்சரிக்கை : தீவிரமான இதய நோய் உள்ளவர்கள், இடுப்பு கீழ் வாயுவினால் அவதிப்படுவோர், இதய நோயாளிகள் இதைச் செய்தல் கூடாது.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer