திருச்செந்தூரின்
அதிசயம்...!
சூரபத்மன்
என்ற அரக்கனை அழித்து திருச்செந்தூரில்
வெற்றிப் புன்னகையுடன் வீற்றிருக்கிறார் முருகப் பெருமான். திருச்செந்தூர்
தமிழகத்தின் தென்கோடியான திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிற்றூர். திருச்செந்தூர்
முருகன் கோவிலின் வரலாறு, இவ்வூரின் வரலாற்றோடு
இணைந்தே வருகிறது.
தமிழகத்தில்
முதன் முதலில் நாககம் தோன்றிய
நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று. ன்றும் தமிழகத்தின்
பல ன மக்களின் பூர்வீகமாக
திருச்செந்தூரும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களும்
ருக்கின்றன.
முருகனின்
அறுபடை வீடுகளுள் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவிலும் ஒன்று. அறுபடை வீடுகளில்,
கடற்கரையில் அமைந்துள்ள ஒரே வீடு இக்கோவிலாகும்.
இங்கு முருகன் சூரபத்மனோடு போரிட்டு,
வென்று, வெற்றிக் கொடியான சேவல் கொடியுடனும்,
பார்வதி தேவி அளித்த வேலுடனும்
மயில் வாகனத்தில் அருள் பாலிக்கிறார். முருகப்
பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் அய்யனார்கள்
என்று அழைக்கப்பட்டார்கள். இப்பகுதியில் வாழ்ந்த அவர்களது வாரிசுகள்
தமிழகத்தின் பல பகுதிக்கு குடிபெயர்ந்தனர்
என்றும் கூறப்படுகிறது.
திருச்செந்தூரின்
அதிசயமாக திகழ்வது நாழிக்கிணறு ஆகும். நாழிக்கிணறு கடலுக்கு
மிக அருகாமையில் உள்ளது. ஆனால், இந்த
கிணற்றின் தண்ணீர், நல்ல தண்ணீராக உள்ளது.
திருச்செந்தூருக்கு வரும் அனைத்து பக்தர்களும்
கடலில் நீராடிவிட்டு, பின்பு இந்த கிணற்று
நீரில் நீராடிய பிறகே முருகனைத்
தரிசிக்கச் செல்கிறார்கள். இந்த செயலுக்குப் பின்னால்
உள்ள புராண வரலாறு மிகவும்
சுவாரஸ்யமானது.
அசுர இனத்தைச் சார்ந்தவர்களான தாரகாசூரனும், சூரபத்மனும் இறையருள் பெற்று தேவர்களை அடிமைப்படுத்தினர்.
வடக்கே தாரகாசூரனும், தெற்கே சூரபத்மனும் மக்களைக்
கொடுமைப்படுத்தி ஆட்சி செய்தனர். தேவர்கள்
வேண்டுகோளுக்கு இணங்க முருகன் தாரகாசூரனை
வீழ்த்திவிட்டார். தெற்கே சூரபத்மனை வீழ்த்த
திருச்செந்தூருக்கு வருகை புரிந்தார். முருகனின்
மயில் வாகனமாக இந்திரன் விளங்கினார்.
சூரபத்மனோடு
ஐந்து நாட்கள் கடும் போர்
நடந்தது. இந்தப் போரில் சூரபத்மனின்
படைகளும், அவனது சகோதரர்களும் அழிக்கப்பட்டனர்.
போரின் ஆறாம் நாள் அன்று
சூரபத்மன் மட்டும் தனியாக போருக்கு
வந்தான். தனது சக்திகள் முழுவதையும்
பயன்படுத்திப் போர் புரிந்தான். ஆனால்,
முருகனின் சக்திக்கு முன்னால், அவனால் எதுவும் செய்ய
முடியவில்லை. இறுதியில் கடலுக்கடியில் உள்ள தனது அரண்மனையில்
ஒளிந்து கொண்டான். பின்பு மாமரமாக உருமாறித்
தாக்கினான். கார்த்திகேயன் தனது வேலால் மரத்தை
இரண்டாகப் பிளந்தார். பத்மாசூரன் உருமாறிய மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும்,
மற்றொன்று மயிலாகவும் மாறியது. இதற்குப் பின்பே முருகன்,சேவல்
கொடியுடனும், மயில் வாகனத்தோடும் காட்சி
புரிந்தார்.
போர் முடிந்த பின்பு, தனது
படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே,
முருகன் தனது வேலால் கிணறு
ஒன்றினை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு ஆகும். 14அடி சுற்றளவு கொண்ட
இந்த சதுரமான கிணறு அதிசயத்தினுள்
ஓர் அதிசயம். இந்த கிணற்றின் நீர்
உப்பாகவும் கருகிய நிறத்தில் இருக்கும்.
இந்த கிணற்றின் உள்ளேயே மற்றொரு கிணறு
உள்ளது. ஒரு அடி மட்டுமே
உள்ள இந்த கிணற்றின் நீர்
தெளிவாகவும் மிகவும் சுவையானதாகவும் இருக்கும்.
ஒரே கிணற்றுப் பகுதியில் இருவேறு சுவை கொண்ட
கிணறு அமைந்தது அதிசயத்தினுள் அதிசயம் ஆகும்.
இந்த அதிசயத்தை நேரில் காண திருச்செந்தூர்
வாருங்களேன்……
No comments:
Post a Comment