அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்
திருவிழா:
பங்குனி உத்திரம், திருகார்த்திகை , வைகாசி விசாகம், கந்த சஷ்டி முருகத்தலங்களில்
கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன்
சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம்,
சூரசம்ஹாரம்,
ஏழாம் நாளில் முருகன்,
தெய்வானை திருக்கல்யாணம்,
அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில்
ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
தெய்வங்களுக்கும் சந்தன
காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி
பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று, அணிவிக்கின்றனர். இதை, தெய்வானையை, முருகன் மணம் முடிக்க
காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து
தருவதாகச் சொல்கிறார்கள்.
No comments:
Post a Comment