Saturday, 28 June 2014

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - கடகம்



ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை)  கடகம்:
கடகம்: (புனர்பூசம் 4, பூரம், ஆயில்யம்) 70/100 குடும்ப மகிழ்ச்சி!
மதிநுட்பத்துடன் பணியாற்றும் கடக ராசி அன்பர்களே!

இது வரை ராகு 4-ம் இடமான துலாமில் இருந்து இருந்து வீண் கலகம், அலைச்சலை உருவாக்கி இருப்பார். இப்போது ராகு 3-ம் இடமான கன்னி ராசிக்கு வருவதால் நன்மையை வாரி வழங்குவார். குறிப்பாக காரிய அனுகூலத்தையும், நற்சுகத்தையும், பொருளாதார வளத்தையும் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் கொடுப்பார். கேது இதுவரை 10-ம் இடமான மேஷத்தில் இருந்து உடல் உபாதை தந்திருப்பார். இனி அவர் 9-ம் இடமான மீனத்திற்கு போகிறார். அதுவும் சிறப்பான இடம் அல்ல. இருந்தாலும், உடல் உபாதை நீங்கி ஆரோக்கியம் மேம்படும். அதே நேரம் கேதுவால் பொருள் இழப்பு, காரிய தோல்வி உண்டாகலாம். ராகுவால் செயல் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். கேதுவால் வரும் தடைகளை குருவின் பார்வையால் முறியடிக்கலாம். மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு மறைந்து ஒற்றுமை ஏற்படும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். புதிய சொத்து வீடு, மனை வாங்க யோகம் உண்டு. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு குருவின் பார்வை கைகொடுக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடந்த காலத்தில் இருந்து வந்த திருட்டு பயம் அடியோடு மறையும். விருந்து, விழா என் சென்று வருவீர்கள். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். நோய்நொடி அனைத்தும் நீங்கும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். ஆரோக்கியம் மேம்படும். இதுவரை இருந்து வந்த பயணப்பீதி மறையும்.

தொழில், வியாபாரம்: பழைய கடன்கள் அடைபடும் விதத்தில் வருமானம் வரும். பண விஷயத்தில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அரசிடம் இருந்து உதவி கிடைக்க தாமதம் ஆகலாம். குறைந்த முதலீட்டில் சுயதொழில் தொடங்க ஏற்ற காலகட்டம். இரும்பு, இயந்திரம், அச்சுத் தொழில், தரகு போன்ற தொழில் சிறந்து ஓங்கும். பழைய பொருட்களை வாங்கி விற்றல் போன்றவற்றிலும் அதிக வருமானம் கிடைக்கும். கேதுவால் உங்கள் முயற்சியில் சில தடைகள் வரத்தான் செய்யும். ஆனால் அதைக் கண்டு சோர்ந்து விட வேண்டாம். ராகு பக்கபலமாக இருப்பதால் எந்த தடையையும் முறியடித்து வெற்றி காணலாம்.

பணியாளர்கள்: சீரான பலனை எதிர்பார்க்கலாம். வேலையில் பளு இருக்கும். ஆனாலும் உழைப்புக்கு ஏற்ப வருமானம் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நன்மையளிக்கும். சிலர் வீண் மனக் குழப்பத்தினால் வேலையில் ஆர்வமில்லாமல் இருக்க வாய்ப்புண்டு. உங்கள் வேலையை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் இருப்பது அவசியம். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். எதிர்பார்க்கும் சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், நன்மையாகவே முடியும்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் பெற விடா முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

அரசியல்வாதிகள்: கட்சித் தொண்டர், மக்கள் மத்தியில் செல்வாக்கு குறையாது. நல்ல பொருளாதார வசதியுடன் இருந்து வருவர். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதமாகலாம்.

மாணவர்கள்: அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலனை குருவின் பார்வை மூலம் பெறலாம். ஆசிரியரின் வழிகாட்டுதல்உதவிகரமாக இருக்கும்.

விவசாயிகள்: நல்ல பல முன்னேற்ற பலனைக் காணலாம். புதிய தொழில் நுட்பத்தைக் கடைபிடித்து வருவாயை அதிகரிக்கலாம். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. கரும்பு, எள், கொள்ளு, மானாவாரி போன்ற பயிர்கள் நல்ல மகசூலைக் கொடுக்கும். வழக்கு விவகாரம் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன சொத்து மீண்டும் கிடைக்கும்.

பெண்கள்: குடும்பத்தாரிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து பாசம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் பணிச்சுமையைச் சந்திப்பர்.

பரிகாரப்பாடல்!

விறகில் தீயினன் பாலிற் படுநெய் போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல் நட்டுணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே.

கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வணங்குங்கள். ஏழைக்குழந்தை படிக்க உதவுங்கள். கீழப்பெரும்பள்ளம்  கேதுவுக்கு அர்ச்சனை செ#யுங்கள்.  திருநாகேஸ்வரத்தில் ராகுவுக்கு பாலபிஷேகம் செ#யலாம். சந்திரபகவானுக்கு அர்ச்சனை செ#து மனபலம் பெறலாம்.


No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer