ராகு-கேது
பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) ரிஷபம்
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2) 75/100 முயற்சியில் வெற்றி!
திட்டமிட்டு செயல்படும்ரிஷப ராசி அன்பர்களே!
ராகு இதுவரை 6-ம் இடமான துலாமில் இருந்து நன்மைகளை தந்து கொண்டிருந்தார். உடல் ஆரோக்கியம், செயலில் வெற்றியை வழங்கிக் கொண் டிருந்தார். தற்போது ராகு 5-ம் இடமான கன்னி ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. இதனால், குடும்பத்தில் பிரச்னை உருவாக இடமுண்டு. அவ்வப்போது இனம் புரியாத வேதனை மனதை ஆட்டிப் படைக்கலாம். அதே நேரம் சாதகமற்ற இடத்தில் இருந்த கேது நன்மை தரும் இடத்துக்கு மாறுகிறார். 12-ம் இடமான மேஷத்தில் இருந்து பொருள் இழப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த அவர், இப்போது 11-ம் இடமான மீனத்திற்கு சென்று நல்ல வளம், உடல் ஆரோக்கியத்தையும் கொடுப்பார். குடும்ப வாழ்வில் மேன்மையைக் கொடுப்பார். எடுத்த புது முயற்சிகளை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலையும் வழங்குவார். கேதுவின் பலத்தால் பொருளாதார வளத்திற்கு எந்த குறையும் இருக்காது. கையில் எப்போதும் பணப்புழக்கம் இருந்து கொண்டேயிருக்கும். முயற்சியில் இருந்த தடையனைத்தும் விலகும். பகைவர்களின் தொல்லையில் சிக்கி அலைக்கழிந்தவர்கள் இனி தைரியமாக செயல்படும் துணிச்சலைப் பெறுவீர்கள். எனவே எடுத்த எந்த காரியத்தையும் சிறப்பாக செய்து முடிக்கலாம். 2014 டிசம்பருக்கு பிறகு சனிபகவான் சாதகமற்ற இடத்திற்கு செல்வதால் பெரியோர்களின் ஆலோசனையை அவ்வப்போது கேட்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அன்றாடத் தேவை அனைத்தும் எளிதில் நிறைவேறும். கணவன், மனைவி இடையே பொறுமையும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் இருப்பது அவசியம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில் காலதாமதம் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பும் சரிவர கிடைக்காது. அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். தேவையற்ற வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நன்மையளிக்கும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். உடல்நலம் சிறப்படையும். மருத்துவச் செலவு பெருமளவில் குறையும். நீண்ட காலமாக சிகிச்சை பெறுபவர்கள் கூட தற்போது வீடு திரும்புவர்.
தொழில், வியாபாரம்: நல்ல வளர்ச்சியும், அதற்கேற்ப லாபமும் உண்டாகும். வியாபாரம் விஷயமாக அடிக்கடி வெளியூர் பயணம் சென்று வர வேண்டியிருக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மையைத் தற்போது எதிர்பார்க்க முடியாது. யாரிடமும் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. புதிய வியாபார முயற்சியில் ஓரளவே நன்மை பெறுவீர்கள். பெண்கள் வகையில் அனுகூலம் கிட்டும். மனைவி பெயரில் உள்ள தொழிலில் லாபம் பன்மடங்கு கிடைக்கும்.
பணியாளர்கள்: பணியில் சீரான பலனை காணலாம். வேலைப்பளு அவ்வப்போது அதிகரித்தாலும் ஓரளவு ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். இடமாற்றப் பீதி சிலருக்கு உருவாகலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. பெண்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். அது உங்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தத்திற்காக அதிக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும்.
அரசியல்வாதிகள்: சமுக நல சேவகர்கள் மக்கள் நலப்பணிக்காக விடாமுயற்சி மேற்கொள்ள வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்பில்லை. பொருளாதார வளம் சிறக்கும். ஆன்மிகப்பணியில் ஈடுபடுபவர்கள் நல்ல பெருமையை அடைவீர்கள். தன்னலமற்ற சேவைக்கு நல்ல மரியாதையும், கவுரவமும் கிடைக்கும்.
மாணவர்கள்: அக்கறையுடன் படிப்பது நல்லது. ஆசிரியரின் ஆலோசனை வளர்ச்சிக்குத் துணை நிற்கும்.
விவசாயிகள்: பணிகள் சிறப்பாக அமையும். குறைந்த பண முதலீட்டில் விவசாயம் செய்யவும். மானாவாரி பயிர்களில் நல்ல வருமானம் காணலாம். புதிய சொத்து முயற்சியின் பேரில் வாங்கலாம். வழக்கு விவகாரங்கள்
சுமாராகவே இருக்கும்.
பெண்கள்: குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். புதிய ஆடை, நகைகள், அழகு சாதன பொருட்களை விரும்பிய வகையில் வாங்க முடியும்.
பரிகாரப்பாடல்!
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறாகி ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.
வெள்ளியன்று ராகு காலத்தில் காளிக்கு எலுமிச்சை தீபமேற்றுங்கள். அபிஷேக வேளையில் பைரவரைத் தரிசியுங்கள். பிரதாஷத்தன்று சிவாலயம் öல்லுங்கள். ராகு காலத்தில் எலுமிச்சை தீபமேற்றி துர்க்கையை வழிபடுங்கள். இயன்றால் திருநாகேஸ்வரம் சென்று வழிபடுங்கள். ஆஞ்சநேயர் வழிபாடு தடையை அகற்றும்.
No comments:
Post a Comment