சுவாமினா அது முருகன் தான்
கடவுள்
என்பதை சமஸ்கிருதத்தில் சுவாமி என்பர்.
விநாயகர், சிவன், விஷ்ணு
என எல்லா கடவுளரையும் பொதுவாக சுவாமி என குறிப்பிட்டாலும் சமஸ்கிருதத்தில் இச்சொல்
சுப்பிரமணியரை மட்டுமே குறிக்கிறது. அமரகோசம் என்னும்
புகழ்பெற்ற சமஸ்கிருத அகராதியில் இதற்கான சான்று உள்ளது. அமர
கோசம் என்றால் அழிவில்லாத பொக்கிஷம் என்பது பொருள்.
முருகனுக்கு
பெருமாள் பெயர்: அருணகிரிநாதர் முருகனை பெருமாள் என்று குறிப்பிடுகிறார். அவர் எழுதிய திருப்புகழ் நூலில், ஒவ்வொரு பாடலின்
கடைசி வரியிலும், பெருமாளே என்ற சொல் இடம்பெறும். பெருமாள் என்பது திருமாலைக் குறிக்கும் சொல்லாகவே இன்று வரை இருந்து
வருகிறது. முருகனை தமிழக மக்கள் திருமாலின் மருமகன் என்பதால்
மால்மருகன் என்று அழைப்பர். முருகனை மணந்த இந்திரனின் மகள்
தெய்வானை, நம்பிராஜன் மகள் வள்ளி இருவரும் திருமாலின்
மகள்களாக முற்பிறவியில் அமுதவல்லி, சுந்தரவல்லியாக
வளர்ந்தனர். பின்னரே முருகனை மணக்கும் பேறு பெற்றனர்.
சிவ, விஷ்ணு இருவருக்கும் பாலமாக
சிவபாலனாகவும், மால் மருகனாகவும் முருகன் விளங்குகிறார்.
No comments:
Post a Comment