ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) துலாம்:
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) 65/100 வரவும் செலவும் சரி!
ஜூன் 16,2014
பிரச்னைகளைத் துணிச்சலுடன் சமாளிக்கும் துலாம் ராசி அன்பர்களே!
இந்த ராகு-கேது பெயர்ச்சி மூலம் உங்களுக்கு நன்மை கிடைக்க உள்ளது. அதுவும் தற்போது கேது மிகமிக நன்மை தரும் இடத்திற்கு வந்துள்ளார். அவர் இதுவரை 7-ம் இடமான மேஷத்தில் இருந்து மனைவி வகையில் பிரச்னையையும், உடல் உபாதைகளையும் தந்திருப்பார். இப்போது 6-ம் இடமான மீனத்திற்கு வந்திருப்பதன் மூலம் அந்த பின்தங்கிய நிலை அடியோடு மறையும். மேலும் பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். செயல்களில் வெற்றி கிடைக்கும்.கேது நன்மை தரும் அளவுக்கு ராகுவால் நற்பலனை தர இயலாது. அவர் இதுவரை உங்கள் ராசியில் இருந்து உறவினர்கள் வகையில் பிரச்னையை உருவாக்கி இருக்கலாம். இப்போது அவர் இடம்மாறி 12-ம் இடமான கன்னி ராசிக்கு வந்துள்ளார். இங்கு அவர் பொருள் விரயத்தையும், துõரதேச பயணத்தையும், இடமாற்றத்தையும் கொடுப்பார். கேது தரும் பொருள் வளத்திற்கேற்ப இவர் செலவைக் கொடுத்து விடுவார்.கேது சாதகமாக நின்று பல்வேறு நன்மைகளைத் தருவார். இதன் மூலம் நீங்கள் எடுத்த செயல் வெற்றிகரமாக முடியும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் செல்வாக்கு மேலோங்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே அன்பும், பாசமும் நீடிக்கும். மனைவி வகையில் இருந்து வந்த ஊடல் மறையும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதமாகலாம். பிள்ளைகளால் பெருமை காணலாம். வீடு, மனை வாங்க சிற்சில தடைகளை மீறித்தான் அனுகூலம் பிறக்கும்.
தொழில், வியாபாரம்: தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். அரசு வகையில் எந்த சலுகையையும் எதிர்பார்க்க முடியாது. பணவிரயம், திருட்டு போன்றவை தடுக்கப்படும். வெளியூர் பயணம் அனுகூலத்தைத் தரும். கம்ப்யூட்டர் தொழில், அச்சுத் தொழில், தரகு, ஆன்மிகம் தொடர்பான தொழில்கள் சிறப்படையும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தாரின் பெயரில் ஆரம்பிக்க வேண்டும்.
பணியாளர்கள்: சீரான பலனை எதிர்பார்க்கலாம். வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வழக்கமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் அதிக செலவை சந்திக்க வேண்டியிருக்கும். வேலையின்றி இருப்பவர்கள் சற்று முயற்சி செய்தால் வேலை கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும்.
கலைஞர்கள்: சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். சிலருக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டுகள் கிடைக்காமல் போகலாம்.
அரசியல்வாதிகள்: பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். பதவிக்காக காத்திருப்பவர்கள் பொறுமை காக்க வேண்டும்.
மாணவர்கள்: அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியிருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் ஓரளவு கிடைக்கும். சிலர் முயற்சி எடுத்து வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பை பெறுவீர்கள்.
விவசாயிகள்: நல்ல பல முன்னேற்றங்களைக் காணலாம். நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூலைத் தரும். புதிய நிலம் வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். சிலருக்கு சாதகமான தீர்ப்பு வந்து கைவிட்டுப்போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். ஆனால், புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.
பெண்கள்: குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பர். ஆடம்பர பொருட்கள், புத்தாடை ஆபரணங்கள் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள், சக பணியாளர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது.
பரிகாரப்பாடல்!
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே! சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே ராமா என்று இரண்டெழுத்தினால்!
ராகுவும், சனிபகவானும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அவர்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள். துர்க்கை வழிபாடு உதவிகரமாக இருக்கும். சனிபகவானுக்கு எள்சோறு படைத்து அதை காக்கைக்கு போடுங்கள். ஸ்ரீராமஜெயம் மந்திரம் சொல்வது நன்மை தரும்.
No comments:
Post a Comment