சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில்
பிரார்த்தனை
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் இத்தலத்தில் குடிகொண்டிருப்பதால்
இத்தலத்தில் எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம்,
நீண்ட ஆயுள்,
நிறைந்த செல்வம் வேண்டி
நிறைய பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கின்றனர். தவிர உடல்பலம், மனபலம் ஆகியவை கிடைக்க இத்தலத்து
அனுமனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். தியானம் செய்பவர்கள் இங்குள்ள இறைவனிடம் வந்து மன
அமைதியை பெற்று செல்கிறார்கள்.
No comments:
Post a Comment