ராகு-கேது
பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) மீனம்:
மீனம்: (பூரட்டாதி4, உத்திரட்டாதி, ரேவதி) 75/100 கெட்டதிலும் நன்மை!
நல்லதை மட்டுமே நினைக்கும் மீன ராசி அன்பர்களே!
ராகு இதுவரை 8ம் இடமான துலாமில் இருந்து முயற்சியில் தடையையும், குடும்பத்தில் பிரிவையும் ஏற்படுத்தியிருப்பார். உறவினர்கள் வகையிலும் மனக்கசப்பும், கருத்துவேறுபாடும் ஏற்பட்டிருக்கும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகி இருக்கும். இப்போது ராகு 7-ம் இடமான கன்னி ராசிக்கு மாறியுள்ளார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. இங்கு அலுவல் காரணமாக நீண்ட துõர இடத்துக்கு இடப்பெயர்ச்சியையும், தரம் தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் அவப் பெயரையும் சந்திக்க நேரலாம். கேது இதுவரை 2ம் இடமான மேஷத்தில் இருந்து பகைவர்களால் தொல்லை, அரசு வகையில் பிரச்னை, திருட்டு பயம் போன்றவற்றை ஏற்படுத்தி இருப்பார். அரசின் கெடுபிடியால் சிற்சில இன்னலுக்கு ஆளாகி இருப்பீர்கள். இந்த நிலையில் கேது இப்போது உங்கள் ராசிக்கு வந்துள்ளார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால், பழைய கெடுபலன்கள் இனி இருக்காது. அவர் செயல்களில் தடையையும், உடல்உபாதையையும் தரலாம். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட வாய்ப்பு உண்டு. எனவே முன் பின் தெரியாதவர்களிடம் எதையும்ஒப்படைக்க வேண்டாம்.எனினும், இவ்வளவு கெட்டதிலும் நன்மை என்ற வகையில், குருவின் ஸ்தானபலம், 9ம் பார்வை பலம் ஆகியவை கெடுபலன்களை முறியடித்து நன்மையையே தரும்.
தொழில், வியாபாரம்: அதிக வேலையும் அலைச்சலும் இருக்கும். ஆனாலும், வெளியூர் பயணம் அனுகூலத்தை கொடுக்கும். போட்டியாளர்களின் தொல்லை இனி இருக்காது. அரசிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பொதுவாக பணமுதலீட்டை விட அறிவு முதலீடே முக்கியம். ஆம்! உங்கள் அறிவைப் பயன்படுத்தி முன்னேறலாம்.
பணியாளர்கள்: நல்ல வளர்ச்சியை காணலாம். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் தவறை உணர்ந்து உங்களிடம் சரணடைவார்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பதவி உயர்வு கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். சம்பள உயர்வு எதிர்பார்த்ததைவிட அதிகமாக கிடைக்கும். உங்கள் ஆற்றல் மேம்படும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வெகு நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம்
கிடைக்கும். நீண்டநாட்களாக போட்டு வைத்த திட்டத்திற்கு இறுதிவடிவம் கிடைக்கும்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசிடமிருந்து பாராட்டு, வெகுமதி கிடைக்கும். நல்ல பொருளாதார வளம் ஏற்படும்.
அரசியல்வாதிகள்: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வார்கள். நல்ல பணப்புழக்கம் இருக்கும். புதியபதவி ஒன்றைப் பெற கடுமையாக முயற்சி எடுப்பார்கள்.
மாணவர்கள்: கல்வியில் சாதனை படைக்கலாம். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் பெறலாம். சிலர் தகாத நண்பர்களுடன் சேர்ந்து படிப்பில் அக்கறை காட்டாமல் இருக்கலாம். எனவே இந்த ராசியினரின் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கையில் சற்று அக்கறை காட்டவும்.
விவசாயிகள்: நல்ல லாபத்தை காணலாம். நெல், கோதுமை, தக்காளி, கேழ்வரகு, கொண்டைக்கடலை பயிர்களில் சிறப்பான மகசூலை காணலாம். சிலர் புதிய சொத்துக்கள் வாங்கலாம். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும்.
பெண்கள்: ஆபரணம், ஆடை வாங்கலாம். விருந்து, விழா, உல்லாசப் பயணம் மேற்கொள்வர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.
பரிகாரப்பாடல்!
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்- செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன் என்னாழி வண்ணன் பால் இன்று.
சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களைச் சுற்றி வாருங்கள். ஏழுமலையான் வழிபாடு இடர்பாட்டை தடுத்து முன்னேற வைக்கும். கருடாழ்வாரை வழிபட்டால் உடல்நிலை ஒத்துழைக்கும். சனி, ராகு-கேது சிறப்பாக இல்லாததால் அவர்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். மேலும் துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.

No comments:
Post a Comment