குரு பெயர்ச்சி பலன்கள் (13.06.14 முதல் 04.07.15 வரை)கும்பம்:
(அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) 55/100 பகைவர் நடுக்கம் பணியில் அழுத்தம்!
(அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) 55/100 பகைவர் நடுக்கம் பணியில் அழுத்தம்!
துணிவுடன்
முடிவெடுக்கும் கும்ப ராசி அன்பர்களே!
குருபகவான்
ராசிக்கு 5 ல் இருந்து நன்மையளித்துக்
கொண்டிருந்தார். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி
நிறைந்திருக்கும். கையிலும் பணப்புழக்கம் இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி
சிறப்பாக நடந்திருக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் பெருமை கிடைத்திருக்கும். பெண்களால்
நல்ல முன்னேற்றத்தை அடைந்திருப்பீர்கள். இந்த
நிலையில் குரு பகவான் ராசிக்கு
6ல் அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை
என்று சொல்ல முடியாது. 5ல்
இருந்தது போல நற்பலனை அவரால்
செய்ய முடியாது. அதே நேரம் ஒரேயடியாக
பிற்போக்கான பலன் ஏற்படும் என்று
பயப்படத் தேவையில்லை. 6ல் இருக்கும் குருவால்
உடல்நலத்தை பாதிக்கலாம். மனதில் தளர்ச்சியை உருவாகும்.
அவரது 9-ம் பார்வை மீனத்தில்
விழுவதால் பல்வேறு நன்மை கிடைக்கும்.
எந்த இடையூறையும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். உங்களையும்
அறியாமல் அபரிமிதமான ஆற்றல் அவ்வப்போது வெளிப்படும்.
அதனை கண்டு பகைவர்களும் அஞ்சும்
நிலை உருவாகும். தனிப்பட்ட ஜாதகத்தில் தசாபுத்தி சிறப்பாக இருந்தால் இன்னும் சிறப்பான பலன்
கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆறாம் இட
குருவால் வீண் செலவு அதிகரிக்கும்.
முயற்சியில் தடைகள் குறுக்கிடும். தீவிர
முயற்சி எடுத்தால் மட்டுமே செயலை நிறைவேற்ற
முடியும். சமூகத்தில் எதிர்பார்த்த மதிப்பு கிடைக்க வாய்ப்பில்லை.
யாருடனும் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவது கூடாது. அளவாகப் பேசுவது
நன்மையளிக்கும். குடும்பத்தில்
மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும்.
தம்பதியிடையே அன்பு நீடிக்கும். திருமணம்
போன்ற சுப விஷயத்தில் தாமதம்
ஏற்பட்டாலும் நன்மையாகவே இருக்கும். மறைமுக எதிரிகள் இருந்த
இடம் தெரியாமல் காணாமல் @பாவர். நட்பு
விஷயத்திலும் எச்சரிக்கை தேவை. டிசம்பருக்கு பிறகு
இந்த நிலை மாறும். கடகராசியில் இருக்கும் உச்சகுருவின் 5,7,9ம் பார்வை முறையே
2,10,12 ஆகிய ராசிகளில் பதிகிறது. இதனால், வாழ்வில் பல
நன்மை காண்பீர்கள். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே
கருத்துவேற்றுமை ஏற்படும் சமயத்தில், குருவருளால் விரைவில் பிரச்னை தீரும். பணப்
பற்றாக்குறை ஏற்பட்ட சமயத்தில் கூட
அதிர்ஷ்டகரமாக பணம் ஒருவழியில் வர
வாய்ப்புண்டு. பணியில் திறமை பளிச்சிடும்
விதத்தில் செயல்படுவீர்கள். தொழில்நுட்பம் குறித்து கற்கும் ஆர்வம் ஏற்படும்.
பன்னிரண்டாம் வீடான மகரத்தில் குருவின்
நேரடியான ஏழாம் பார்வை விழுவதால்,
சுபவிரயம் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில்
சுபநிகழ்ச்சி நடத்திட யோகமுண்டு. ஆன்மிகத்
தலங்களுக்குச் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள்.
தொழில்,
வியாபாரம்: தொழில்,
வியாபாரத்தில் மிதமான வளர்ச்சியும், அதற்கேற்ற
லாபமும் கிடைக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
சிலருக்கு வீண் விரயம் ஏற்பட
வாய்ப்புண்டு. யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க
வேண்டாம். பெண்கள் வகையில் இடையூறு
வரலாம். எந்த விஷயத்திலும் சிந்தித்து
செயல்படுத்துவது நல்லது. அரசாங்க வகையில்
எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்காமல்
போகலாம். புதிய முயற்சி, விரிவாக்கம்
இப்போதைக்கு வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தினாலே போதும்.
பணியாளர்கள்: பணியாளர்கள்
சீரான வளர்ச்சி காண்பர். கடந்த காலத்தை விட
பணிச்சுமை அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். அதே நேரம் சம்பள
உயர்வு, பதவி உயர்வு போன்றவை
கிடைக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போக வேண்டிய கட்டாயம்
உருவாகலாம். சிலருக்கு பணி, இடமாற்றம் ஏற்படலாம்.
அதிக முயற்சி செய்தால் புதிய
வேலையும் கிடைக்கும். ஆரம்ப காலத்தில் சம்பளம்
சற்று குறைவாக இருந்தாலும் போகப்போக
முன்னேற்றம் தருவதாக அமையும்.
பெண்கள்: பெண்கள்
குடும்பச் செலவுக்கு அவ்வப்போது திண்டாட நேரிடும். சிக்கனமாக
செலவழிப்பது நன்மையளிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலை கொள்ள வாய்ப்புண்டு.
கணவரின் சொல்லுக்கு கட்டுப்படுவது பிரச்னையைத் தவிர்க்க உதவும். பணிக்கு செல்லும்
பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் உடல் அசதிக்கு
ஆளாக வாய்ப்புண்டு.
கலைஞர்கள்: புதிய
ஒப்பந்தங்கள் விடா முயற்சியின் பேரில்
கிடைக்கும். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம்.
அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள்,
சமூகநல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். தொண்டர்களின்
எதிர்ப்புக்கு ஆளாகாமல் இருப்பது நன்மையளிக்கும்.
மாணவர்கள்:
தீவிர முயற்சி எடுத்தால் தான்
நல்ல முன்னேற்றம் பெற முடியும். படிப்பில்
கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை
உருவாகலாம்.
விவசாயிகள்: விவசாயத்தில்
உழைப்புக்கு ஏற்ற பலனைத் தான்
பெற முடியும். அதிக முதலீடு எதிலும்
செய்ய வேண்டாம். மானாவாரி விவசாயத்தை மேற்கொள்வது நல்லது. நிலப்பிரச்னையை சமரச
பேச்சின் மூலம் தீர்ப்பது நல்லது.
புதிய வழக்கில் சிக்க வேண்டாம்.
உடல்நலம்: கேதுவால்
சில சமயத்தில் பிரச்னை ஏற்பட்டாலும் பாதிப்பு
இருக்காது. மற்றபடி உடல்நலம் சிறப்பாக
இருக்கும்.
குரு அதிசார பலன்!
குருபகவான்
டிசம்பர் 3 ல் அதிசாரம் பெற்று
சிம்ம ராசிக்கு மாறுகிறார். 22ம் தேதி வரைஅதில்
இருப்பார். இந்த காலத்தில் குடும்பத்தில்
மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப நிகழ்ச்சியை நடத்திட
வாய்ப்புண்டு. சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டுத் தேவை அனைத்தும் பூர்த்தியாகும்.
சிலருக்கு பதவி உயர்வு உண்டாகும்.
பரிகாரம்!
விநாயகரையும்,
லட்”மியையும் வணங்கி வாருங்கள். நவக்கிரகங்களை
தொடர்ந்து வலம் வந்து வழிபடுங்கள்.
காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். முருகன் கோவிலுக்கு சென்று
வாருங்கள். ஆலங்குடி சென்று அங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு
21 தீபம் ஏற்றி வழிபடுங்கள். சனி
பகவானும் சாதகமற்ற நிலையில் இருக்கிறார். அவரின் அருளை பெற
சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள்.
பரிகாரப்பாடல்!
உலகளந்த
திருமாலின் வலமார்பில் உறைபவளே! உலகமெலாம் காத்து நிற்கும் தேவி
மகாலட்சுமியே! உலகெங்கும் ஆட்சி செய்யும் அஷ்டலட்சுமி
தாயே! உன் பாதம் சரணடைந்தோம்
நலம் தருவாய் அம்மா!
No comments:
Post a Comment