உவரி சுயம்புலிங்க
சுவாமி திருக்கோயில் தலபெருமை:
இறைவனின் சிறப்புடைய 25 மூர்த்தங்களில் ஒன்று லிங்கோத்பவர். இங்கே இறைவன் சுயம்பு லிங்கோத்பவராக
உள்ளார்.
சூரிய அபிசேகம் : சூரியன் தன் பொற்கரங்களால் இறைவனை இத்தலத்தில் ஆராதிப்பதே தனி
அழகு என்று சொல்லலாம். மார்கழி மாதம் 30 நாளும் சுயம்பு லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும். வேறு
சில ஆலயங்களில் இது போல் சூரிய ஒளி லிங்கத்தின் மேல் விழுவதுண்டு என்றாலும் அங்கெல்லாம்
ஒருநாள் இருநாள் மட்டுமே விழும். மாதத்தின் முப்பது நாளும் முழுமையாக சிவலிங்கத்தின்
மீது மேல் சூரிய ஒளிபடுவது உலகிலேயே இங்கு மட்டும்தான்.
இயற்கையே இறைவனுக்குக் கவரி வீசுவது உவரியில்தான்.
கடல் ஓரத்தில் 4 ஊற்றுகள் உள்ளன. இவை அனைத்தும் நல்ல தண்ணீர் ஊற்றுகள். சுவாமியின் அபிஷேகத் தண்ணீர்
இது என்பது மற்றொரு அதிசயம்.
மனமுருக வழிபட்டால் வயிற்று வலி மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் நோய்குணமாகிறது.
இந்த கடற்கரைக்கோயிலுக்கு ஒருமுறை சென்றவர்கள் மிகுந்த மனநிம்மதியோடு திரும்பி
வருவார்கள்.
சுற்றுலாப்பயணிகள் வந்து போகுமளவுக்கு சிறப்புடைய அழகிய கோயில்.
No comments:
Post a Comment