குரு பெயர்ச்சி பலன்கள் (13.06.14 முதல் 04.07.15 வரை)கடகம்:
(புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) 65/100 (12க்கு
1பரவாயில்லே! குடும்பத்தைப் பிரிவீங்க!
எதையும்
சாமர்த்தியாக செய்யும் கடகராசி அன்பர்களே!
குருபகவான்
இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம்
இடத்தில் இருந்தார். அவர் பல்வேறு இடையூறுகளை
கொடுத்து இருப்பார். பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு இருக்கும்.
இப்படி பிற்போக்கான பலனைத் தந்த குருபகவான்
தற்போது உங்கள் ராசிக்குள் அடியெடுத்து
வைத்துள்ளார். இதுவும் அவ்வளவு சிறப்பான
நிலை என்று சொல்ல முடியாது.
ஆனாலும் அவர் 12-ம் இடத்தில்
இருந்ததுபோல கெடு பலன்களை செய்ய
மாட்டார். ஜென்ம ராமர் வனத்திலே
சீதையை சிறை வைத்ததும் - என்று
ஜோதிடத்தில் ஒரு வாக்கு உண்டு.
அதாவது ராமரின் ஜாதகத்தில் 1-ம்
இடத்தில் குரு இருக்கும்போது வனவாசம்
செல்ல நேரிட்டது என்று கூறுகிறது. அந்த
நிலை உங்களுக்கு வராது. காரணம் ராமரின்
ஜாதக நிலைவேறு. உங்களுடைய கிரக நிலை வேறு.
ராமர் தெய்வ அவதாரம். நாம்
மனிதர்கள். பொதுவாக குரு 1-ம்
இடத்தில் இருக்கும்போது கலகம், விரோதம் வரும்
என்றும் மந்த நிலை ஏற்படும்
என்றும் கூறப்படுவது உண்டு. அதற்காக கவலைப்பட
வேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரின் அனைத்துப் பார்வைகளும்
சிறப்பாக உள்ளது. குருவின் பார்வைக்கு
கோடிநன்மை உண்டு. அவர் தான்
இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்ப்பார்.
அந்த மூன்று இடங்களும் சாதகமாக
இருப்பது விசேஷம். இதனால் உங்களுக்கு வரும்
இடையூறுகள் அனைத்தையும் முறியடித்து வெற்றிக்கு வழிவகுப்பார். மேலும் பார்வைகள் மூலம்
எண்ணற்ற நன்மைகளையும் தருவார்.முக்கிய கிரகமான
ராகுவும் பல்வேறு நன்மைகளைத் தருவார்.
மேலும் குரு மற்றும் சனிபகவானின்
பார்வைகளால் அதிக நன்மைகள் கிடைக்கும்.
எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும்.
நல்ல பணப்புழக்கம் இருக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும்.
பொருளாதார வளம் இருந்துகொண்டே இருக்கும்
என்பதால் தேவைகள் பூர்த்தியா கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும்.
விருந்து, விழா என சென்று
வருவீர்கள்.கணவன்- மனைவி இடையே
அன்பு நீடித்தாலும், அவ்வப்போது மனக்கசப்புகள் வரத்தான் செய்யும். ஆனால் அவை உங்கள் விட்டுக்கொடுக்கும் அணுகுமுறையால்
விலகிவிடும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற
சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அதற்காக சற்று முயற்சி
எடுக்க வேண்டியதிருக்கும். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள்.
பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுபச்
செலவுகளால் கடன் வாங்கும் நிலை
வரும். டிசம்பருக்கு பிறகு குடும்பத்தில் சிறு
சிறு மனக்குழப்பங்கள் வரத்தான் செய்யும். பகையை ஏற்படுத்துவார்.
தொழில்,
வியாபாரம்: முன்னேற்றப்பாதையில் செல்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.தொழிலில் லாபம் குறையாது. அதிகமாக
அலைச்சல் இருக்கும். ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை
உருவாகலாம். அரசின் உதவி அவ்வளவு
எளிதாக கிடைக்காது. ஆனால், முயற்சி கைகொடுக்கும்.
போட்டியாளர் கள் இடையூறு அவ்வப்போது
தலைதூக்கினாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள்.
பொருள் விரயம் ஏற்படலாம். சிக்கனமாக
இருப்பது நல்லது.
பணியாளர்கள்:
கடந்த காலத்தில் இருந்த பிரச்னையில் இருந்து
விடுபடுவர். வேலையில் முன்னேற்றம் இருக்கும். ஆனாலும், வேலைப்பளு இருக்கத்தான் செய்யும். உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்காமல்
போகாது. பதவி உயர்வு கிடைக்கும்.
மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சக
ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சற்று முயற்சி செய்தால்
உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். இடமாற்ற பீதி தொடரத்தான்
செய்யும். வக்கீல்கள்,ஆசிரியர்கள் தொழிலில் சிறந்து விளங்குவர். நல்ல
வளத்தையும் அடைவர்.
பெண்கள்:
புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அமைதியும்,
பொறுமையும் தேவை. உடல் நலம்
சிறப்படையும்.
கலைஞர்கள்:
சிறப்பான பலன்களை காணலாம், புதிய
ஒப்பந்தங்கள் பெற சற்று முயற்சி
எடுக்க வேண்டியது இருக்கும். அதே நேரம் புகழ்,
பாராட்டு உங்களை வந்து சேரும்.
பண வரவும் இருக்கும்.
அரசியல்வாதிகள்:அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் நற்பெயர்
பெறுவர். பொதுமக்கள் மத்தியில் முன்பைவிட தற்போது சிறப்பு அடைவர்.
எதிலும் வெற்றி பெறுவர்.
மாணவர்கள்:
கடந்த ஆண்டு ஏற்பட்ட பிற்போக்கான
நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றத்திற்கு
வழி காணலாம். இந்த ஆண்டு கல்வியில்
நல்ல தேர்ச்சி இருக்கும். விரும்பிய பாடங்களைப் பெறலாம்.
ஆனாலும், குரு சாதகமற்ற
ஸ்தானத்தில் இருப்பதால் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி
படிக்க வேண்டியது இருக்கும். ஆசிரியர்கள் சொற்படிநடந்தால் முன்னேற்றம் காணலாம்.
விவசாயிகள்:
பழைய கஷ்டத்தில் இருந்து சற்று மீளலாம்.
அதிக உழைப்பு இருக்கும். உழைப்புக்கு
ஏற்ற பலனும் கிடைக்கும். அதிகமான
பண முதலீடு செய்ய வேண்டாம்.
தேவையான மகசூல் கிடைக்கும். குறிப்பாக
நெல். கோதுமை. சோளம் நல்ல
வருமானத்தைக் கொடுக்கும். மானாவாரி பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும்.
வழக்கு விவகாரங்கள் இழுத்தடிக்கும். ஆனாலும், அதிக பாதகம் ஏற்பட
வாய்ப்பு இல்லை.
உடல்நிலை:
நல்ல ஆ@ராக்கியத்துடன் இருந்து
வருவீர்கள். உடல் நலனுக்கான விஷயங்களில்
அக்கறை உண்டாகும்.
குரு அதிசாரப் பலன்!
குருபகவான்
டிசம்பர் 3-ந் தேதி அதிசாரம்
பெற்று சிம்ம ராசிக்கு மாறுகிறார்.
22-ந் தேதி வரைஅதில் இருப்பார்.
இந்த காலத்தில் உங்களது ஆற்றல் மேம்படும்.
இதுவரை இருந்த மந்த நிலை
மாறும். துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும்.
தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது.
அவர்கள் சரண் அடையும் நிலை
ஏற்படும்.
பரிகாரம்!
வியாழக்கிழமை
தோறும் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து கொண்டைக்கடலை தானம்
செய்யலாம். ஏழைக் குழந்தைகள் படிக்க
இயன்ற உதவி செய்யுங்கள்.ஆண்டி
கோலத்தில் உள்ள முருகனை தரிசனம்
செய்யுங்கள். துர்க்கை வழிபாடு வாழ்வில் நலத்தைக்
கொடுக்கும். துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றவும் கேதுவுக்கு
நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.
டிசம்பர் வரை சனிபகவானுக்கு அர்ச்சனை
செய்யுங்கள். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். சனிபகவானுக்கு
நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள். சித்ரபுத்திர
நாயனாரை வணங்குங்கள்.
பரிகாரப்பாடல்!
செடியாய
வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!நெடியானே வேங்கடவா நின்கோயில் வாசல்அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்படியாய்க் கிடந்துன் பவளவாய்க் காண்பேனே!
No comments:
Post a Comment