குரு பெயர்ச்சி பலன்கள் (13.06.14 முதல் 04.07.15 வரை)விருச்சிகம்:
(விசாகம் 4, அனுஷம், கேட்டை) 80/100 (இனியெல்லாம்
சுகமே! இருந்தாலும் சஞ்சலமே!
நன்றி மறவாத மனம் படைத்த
விருச்சிக ராசி அன்பர்களே!
குரு பகவான் ராசிக்கு 8 ல்
இருந்து வந்தார். இது சிறப்பான நிலை
அல்ல . 8-ல் குரு இருக்கும்
போது பல இன்னல்களை தந்திருப்பார்.
மனவேதனை வாட்டியிருக்கும். பொருளாதாரத்தில் திடீர் சரிவும் ஏற்பட்டிருக்கும்.
உறவினர், நண்பர்களால் பிரச்னைக்கு ஆளாகி இருப்பீர்கள். இந்த
நிலையில் குரு தற்போது 9-ம்
இடமான கடகத்திற்கு செல்கிறார். இது சிறப்பான இடம்.
இதுவரை ஏற்பட்ட துன்பம் நீங்கி
வாழ்வில் ”கம் உண்டாகும்.
மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். நினைத்த காரியத்தை திட்டமிட்டபடி
வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கையில்
பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவை அனைத்தும் பூர்த்தியாகும்.
தம்பதியிடையே ஒற்றுமை சிறக்கும். உறவினர்
வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். குடும்பத்துடன் அடிக்கடி விருந்து விழா என சென்று
மகிழ்வீர்கள்.அக்கம்பக்கத்தினர் உங்களை பெருமையாக பேசுவார்கள்.
உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்களும் உங்களின் மேன்மை அறிந்து நெருங்கி
வருவர். தடைபட்டு வந்த சுபநிகழ்ச்சி இனிதே
நடக்க வாய்ப்பு உண்டு. அதிலும் நல்ல
வரனாகவும் அமையும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்..
2014 டிசம்பரில் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று
வருவீர்கள். இவை அனைத்தும் குருவால்
கிடைக்கப் போகும் நற்பலன்களே.2014 டிசம்பருக்கு
பிறகு உறவினர் வகையில் வீண்
மனக் கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
சிலருக்கு விரும்பாத விதத்தில் வெளியூர் வாசம் இருக்க நேரிடலாம்.
குருவின் 5,7,9ம் பார்வைகள் முறையே
ராசி, மூன்று, ஐந்தாம் இடங்களில்
பதிகிறது. இதன் மூலம் நன்மையான
பலன்களைப் பெற்று மகிழ்வீர்கள். குருவின்
உச்சப்பார்வை ராசியில் பதிவதால், எடுத்துக் கொண்ட புதுமுயற்சி அனைத்தும்
மளமளவென நிறை வேறும். மனம்
போல மணவாழ்வு அமையும். மனதில் எப்போதும் தைரியம்
நிலைத்திருக்கும். இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு
தக்க சமயத்தில் கிடைக்கும். புத்திரர்களின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வீர்கள்.
அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கான விஷயங்களில் ஆர்வம் காட்டி வருவீர்கள்.
தொழில்,
வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் நல்ல
வளர்ச்சியும், அதற்கேற்ப அதிக வருமானமும் கிடைக்கும்.
கடந்த காலத்தில் குறுக்கிட்ட சிரமம் அனைத்தும் விலகும்.
எதிர்காலம் கருதி சேமிக்கவும் செய்வீர்கள்.
இது ஏழரை சனி காலம்
என்பதால் அதிக முதலீடு செய்ய
வேண்டாம். பங்குதாரர்களிடையே கருத்து ஒற்றுமை ஏற்படும்.
அவ்வப்போது மறைமுக எதிரிகள் தொல்லை
இருக்கத் தான் செய்யும். சற்று
கவனம் தேவை. கையிருப்பை நிரந்தர
வைப்பு நிதியாக வங்கியில் போட்டு
வைக்கவும். 2015 ஜனவரியில் அரசாங்க வகையில் அனுகூலமான
போக்கு காணப்படவில்லை. எனவே வரவு,செலவு
கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
பிப்ரவரியில் லாபம் மீண்டும் அதிகரிக்க
தொடங்கும்.
பணியாளர்கள்: பணியாளர்களுக்கு
கடந்த ஓராண்டாக வேலையில் எண்ணற்ற பிரச்னை இருந்திருக்கும்.
அந்த பிரச்னைக்கு இனி விடிவுகாலம் ஏற்படும்.
மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கப்
பெறுவீர்கள். சிலருக்கு முக்கிய பொறுப்பும் கிடைக்க
வாய்ப்புண்டு. பணியில் திறமை பளிச்சிடும்.
சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். ஏதோ காரணத்தால் பணியை
இழந்தவர்கள் மீண்டும் பணியில் அமர்வர்.
பெண்கள்: குடும்பத்தில்
குதூகலமான பலனைக் காண்பர். குறுக்கிடும்
தடைகளை சாதுரியமாக செயல்பட்டு எளிதில் முறியடிப்பீர்கள். சமூகத்தில்
மதிப்பு அதிகரிக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட
அவப்பெயர் அடியோடு நீங்கும். கணவரின்
அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்கள் சமூகத்தில் மிகவும் உன்னத நிலையை
அடைவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உறவினர்
மத்தியிலும் நன்மதிப்பை பெறுவர். விருந்து, விழா என சென்று
மகிழ்வீர்கள். 2015 பிப்ரவரியில் சுக்கிரனால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடக்க
வாய்ப்பு உண்டு. சிலருக்கு குழந்தை
பாக்கியம் கிடைக்கும்.
கலைஞர்கள்:
பொருளாதார வசதியுடன் வாழ்வர். புதிய ஒப்பந்தம் எளிதாக
கிடைக்கும். சமூகத்தில் புகழ், பாராட்டு வளரும்.
சிலர் அரசிடம் இருந்து விருது
பெற வாய்ப்புண்டு.
அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள்
மேம்பாடு அடைவர். எதிர்பார்த்த பதவி
கிடைக்கும். பண வரவு சிறப்பாக
இருக்கும். இதுவரை இருந்த தடங்கல்
இனி இருக்காது. மக்களிடத்தில் செல்வாக்கு உயரும். தொண்டர்களின் ஒத்துழைப்பு
மகிழ்ச்சி தரும்.
மாணவர்கள்: இந்த
கல்வி ஆண்டில் சிறப்பான வளர்ச்சியைக்
காணலாம். கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்.
போட்டிகளில் வெற்றி பெறவும் வாய்ப்புண்டு.
கடந்த ஆண்டு இருந்த தேக்கநிலை
மறையும். விரும்பிய பாடம் கிடைக்கும். வெளிநாடு
சென்று படிக்கும் வாய்ப்பும் சிலருக்கு கிடைக்கும். படித்து முடித்து விட்டு
வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை
கிடைக்கும்.
விவசாயிகள்: விவசாயம்
சிறப்படையும். நெல், சோளம் போன்ற
வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும்.
வழக்கு விவகாரத்தில் சாதகமான சூழல் அமையும்.
நிலப்பிரச்னைக்கு சுமூகத்தீர்வு காணலாம்.
உடல்நலம்:
நோயின் தீவிரம் குறைந்து மருத்துவச்செலவு
கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பதால் கடமையில் ஆர்வம் பிறக்கும்.
குரு அதிசார பலன்!
குருபகவான்
டிசம்பர் 3-ந் தேதி அதிசாரம்
பெற்று சிம்ம ராசிக்கு மாறுகிறார்.
22-ந் தேதி வரைஅதில் இருப்பார்.
இந்த சமயத்தில் குரு பகவான் பொருள்
நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்த
வாய்ப்புண்டு. புதிய முயற்சிகளில் தடைகள்
அடிக்கடி உண்டாகி விலகும். யாரிடமும்
தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். நிதானத்துடன் செயல்படுவது நன்மையளிக்கும்.
பரிகாரம்!
சனிபகவானுக்கு
நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். விநாயகரையும்,
ஆஞ்சநேயரையும் வணங்கி வாருங்கள். வெள்ளியன்று
அம்மன் வழிபாடு செய்வது நன்மையளிக்கும்.
பத்திரகாளி அம்மனை எலுமிச்சை தீபம்
ஏற்றி வாருங்கள். சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி எள்
சோறு படைத்து அதை காக்கைக்கு
போடலாம். யானைக்கு கரும்பு கொடுப்பது நல்லது.
ஊனமுற்ற ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்.
பரிகாரப்
பாடல்!
இல்லாமை
சொல்லி ஒருவர் தம்பால் சென்று
இழிவுபட்டுநில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்கல்லாமை கற்ற
கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள்
சேர்மின்களே.
No comments:
Post a Comment