ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) தனுசு:
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) 50/100
தீயவர்களிடம் சிக்காதீர்!
காரியம் சாதிக்கும் திறனுள்ள தனுசு ராசி அன்பர்களே!
இதுவரை 11ம் இடமான துலாமில் இருந்து பொருளாதார வளத்தையும், பெண்களால் அனுகூலத்தையும் காடுத்து வந்த ராகு, 10-ம் இடமான கன்னி ராசிக்கு மாறுகிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் அல்ல. இங்கு அவர் பொருள் இழப்பையும், சிறு சிறு உடல் உபாதைகளையும் கொடுப்பார். கேது இதுவரை மேஷத்தில் அதாவது 5-ம் இடத்தில் இருந்தார். அங்கு இருந்த அவர் உடல் நலப்பாதிப்பையும், பிள்ளைகளால் பிரச்னைகளையும் தந்து இருக்கலாம். இப்போது கேது 4-ம் இடமான மீனத்திற்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அவரால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல் நலம் பாதிப்பு வரலாம். வயிறு பிரச்னை வரும்.ஆனால் எந்த பிரச்னையையும் முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும். எனவே வீண்விவாதங்களை தவிர்க்கவும். உங்கள் கவுரவத்திற்கு எந்த பாதிப்பும் வராத வகையில் நடந்து கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது. பொறுமையே இந்தக் காலத்தைக் கடக்க உதவும். டிசம்பருக்குப் பிறகு பொருளாதார இழப்பு வரலாம். அனாவசிய செலவைத் தவிர்க்க வேண்டும். கேதுவால் சிற்சில உடல் உபாதைகள் வரலாம். ஆனால், அதனால் பாதிப்பு ஏதும் ஏற்படாது.
தொழில், வியாபாரம்: பணம் விரயம் ஆகலாம். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். போட்டியாளர்களின் இடையூறு அவ்வப்போது தலைதுõக்கலாம். அதேபோல் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். எனவே அந்த வகையில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தினாலே போதும். பெண்கள் வகையிலும் பிரச்னை வரலாம்.
பணியாளர்கள்: வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். அதே நேரம் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம். உங்கள் செல்வாக்குக்கு எந்த குறையும் இருக்காது. சிலர் வேலையில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். சோம்பல் அல்லது உடல்நிலை காரணமாக வேலையில் அவ்வப்போது சிரமங்களைச் சந்திக்கலாம். அவர்கள் குருவுக்கு அர்ச்சனை செய்து வந்தால் இந்த சிரமங்களில் இருந்து விடுதலை பெற்று விடலாம்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்களை முயற்சியின் பேரில் பெறலாம். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு கிடைக்காமல் போகலாம்.அரசியல்வாதிகள்: பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியிருக்கும். அனாவசியமாக எந்த துறையிலும் ஈடுபட வேண்டாம்.
மாணவர்கள்: தீவிர முயற்சி எடுத்தால்தான் நல்ல முன்னேற்றம் காண முடியும். சிலர் தகாத சேர்க்கையால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். எனவே, இந்த ராசி பிள்ளைகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கடுமையாகக் கவனம் செலுத்த வேண்டும்.
விவசாயம்: அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். அதிக முதலீடு எதிலும் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். சிலருக்கு பாதகமான தீர்ப்பு வரலாம். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரனிடம் சமரசமாக போகலாம் என்ற நிலையை கையாள்வதன் மூலம் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு விடலாம்.
பெண்கள்: குடும்பத் தேவைக்காக அதிகமாக பாடுபட வேண்டியிருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கையில் கண்ணும் கருத்துமாக இருக்கவும். ஆடம்பர செலவைக் குறைத்துக் கொள்ளவும்.
பரிகாரப்பாடல்!
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடி படுதமருகங்கை தரித்ததோர் கோலகால பைரவனாகி வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச் சிரித்து அருள் செய்தார் சேறை செந்நெறிச் செல்வனாரே.
ராகுவும், கேதுவும் சாதகமற்ற நிலையில் உள்ளதால், காளியின் அருள் கிடைக்க அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடும், பைரவர் வழிபாடும் தடைகளை கடந்து உங்களை முன்னேற்றும். ஏழைகளுக்கு நீலம் மற்றும் பல வண்ணம் நிற புத்தாடைகளைத் தானம் செய்யுங்கள். பெருமாள் கோயிலுக்கு
சென்று வாருங்கள்.
No comments:
Post a Comment