ராகு-கேது
பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) மேஷம்
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1பாதம்) 70/100/ பணமழை கொட்டும்!
எல்லோரிடமும் நட்புடன் பழகும் மேஷ ராசி அன்பர்களே!
இது வரை ராகு, கேதுவும் சாதகமற்ற இடத்தில் இருந்து பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். ராகு ராசிக்கு 7ல் துலாமில் இருந்து இன்னலைத் தந்து கொண்டிருந்தார். இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலையை உருவாக்கி இருப்பார். தரம் தாழ்ந்தவர்களோடு நட்பு கொள்ள வைத்து செல்வாக்கை குறைத்திருப்பார். அப்படிப்பட்ட ராகு இப்போது 6-ம் இடமான கன்னிக்கு வந்துள்ளார். இது சிறப்பான இடம். இதனால் இடர்பாடு அனைத்தும் நீங்கி விடும். கேது இது வரை ராசியில் இருந்து உடல் உபாதை, அரசால் பிரச்னையைத் தந்திருப்பார். முயற்சியில் தடை பல வந்திருக்கலாம். இப்போது கேது ராசிக்கு 12-ம் இடமான மீனத்திற்கு போகிறார். இது சிறப்பான இடம் அல்ல. இதனால், கடந்த கால பிற்போக்கான நிலை மறையும் என்றாலும், பொருள் விரயம் ஏற்படலாம். உடல் உபாதை உண்டாகலாம். வாழ்வில் முன்னேற்றம் உண்டாக ராகு துணை நிற்பார். குடும்ப வகையிலும் நன்மை அதிகரிக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருப்பதால், பொருளாதாரம் பன்மடங்கு மேலோங்கும். தடைபட்டு வந்த செயல்கள் மளமளவென நடந்தேறும். நீண்ட நாளாக எதிர்பார்த்த ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் வசதி வாய்ப்பு பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைக்கும். கணவன், மனைவி இடையே இருந்த மனக்கசப்பு அடியோடு மறைந்து ஒற்றுமை மேம்படும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே கைகூடும். புதிய வீடு,வாகனம் வாங்க யோகம் கூடிவரும்.
தொழில், வியாபாரம்: எதிரிகளின் இடையூறுகளில் இருந்து விடுபடுவீர்கள். தடையின்றி இனி முன்னேறலாம். வீண் விரயம் நீங்கி, சேமிக்கவும் வாய்ப்புண்டாகும். அதிர்ஷ்டகரமாக திடீர் வருமானம் கிடைக்கவும் வாய்ப்புண்டு. தொழில் விஷயமாக ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகாது. இரும்பு, மற்றும் தரகு தொடர்பான தொழில் நன்கு வளர்ச்சி அடையும். புதிய தொழில் முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் ஆரம்பிக்கலாம்.
பணியாளர்கள்: சக ஊழியர்கள் உதவி கரமாக செயல்படுவர். வீண் அலைச்சல் இருக்காது. அப்படியே வெளியூர்ப்பயணம் மேற்கொண்டாலும் ஆதாயத்துடன் வருவீர்கள்.
புதிய பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. சிலருக்கு பாராட்டு, விருது போன்றவையும் கிடைக்கும்.
கலைஞர்கள்: குறுக்கிட்ட பிரச்னை நீங்கி, வாழ்வில் முன்னேற்றம் காணலாம். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கப் பெறுவர். வருமானம் சிறப்பாக இருக்கும்.
அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். ஆனால் பண விஷயத்தில் தேவை விரைவில் நிறைவேறும்.
மாணவர்கள்: சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நன்மையளிக்கும். விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர விடாமுயற்சி தேவைப்படும். கடந்த காலத்தில் நட்பினால் பிரச்னைக்கு உள்ளானவர்கள் இனிநல்ல புத்தியோடு செயல்படுவதற்கான காலம் ஆரம்பமாகும்.
விவசாயிகள்: முன்னேற்றமான பலனைக் காணலாம். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. அதற்கான சூழ்நிலை தானாகவே அமையும். எள், கரும்பு, உளுந்து, மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம். வழக்கு விவகாரத்தில் திருப்தியான முடிவு கிடைக்கும்.
பெண்கள்: வளர்ச்சிப்பாதையில் வெற்றி நடை போடுவர். கணவர், குடும்பத்தாரின் அன்பு முழுமையாக கிடைக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பரிகாரப் பாடல்!
எனை நாடி வந்த கோளென் செயும் கொடுங்கூற்றென் செயும்- குமரேசரிரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. நாளென் செயும் வினைதான் என்செயும்
கீழப்பெரும்பள்ளம் கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். திருச்செந்துõர் முருகனை வழிபடுவதும் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். விநாயகர் வழிபாட்டின் மூலம் பிரச்னைகளிலிருந்து தப்பிவிடலாம்.
No comments:
Post a Comment