கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயில் தல சிறப்பு:
இது
முக்கடல் சங்கமிக்கும் இந்திய தென்கோடியில் அமைந்த
மிக சிறந்த சுற்றுலா தலம்.
கிழக்கே வங்கக்கடலும் தெற்கே இந்தியப் பெருங்கடலும்
மேற்கே அரபிக்கடலும் கூடி அலைமோதும் அழகிய
காட்சியுடையது. சில பவுர்ணமி நாளன்று,
இக்கடற்கரையில் நின்று மாலைக் கதிரவன்
மேலைக் கடலில் மறைவதையும் முழுமதி
கீழைக் கடலில் கிளர்ந்தெழுவதையும் ஒரு
சேரக் கண்டு களிக்கலாம். 1984ல்
தேசப்பிதா காந்தியடிகளின் அஸ்தி இங்கு கடலில்
கரைக்கப்பட்டது. கரைக்கும் முன்பு அஸ்தி வைக்கப்பட்ட
கலசம் ஒரு பீடத்தின் மீது
வைத்து அஞ்சலி செய்யப்பட்டது. அவ்விடத்தில்
ஒரு நினைவுச்சின்னம் கட்ட காந்தியடிகளின் சீடர்
கிருபளானி மேற்கொண்ட முயற்சியால் 1954ல் அடிக்கல் நாட்டி
1956 ல் அழகிய மண்டபமாக கட்டி
முடிக்கப்பட்டது. காந்திஜி பிறந்த நாளான அக்டோபர்
2 -ந்தேதி சூரிய ஒளி பீடத்தின்
மீது படும்படியாக அமைத்திருப்பது தனிசிறப்பு. சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்திழுக்கும்
மண்டபமாக திகழ்கிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது
குமரி சக்தி பீடம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11
மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
No comments:
Post a Comment