ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) கன்னி:
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) 60/100 எதிரிகளால் பிரச்னை!
கடமை உணர்வு மிக்க கன்னி ராசி அன்பர்களே!
இதுவரை ராகு உங்கள் ராசிக்கு 2ம் இடமான துலாமில் இருந்து குடும்பத்தில் சிற்சில பிரச்னைகளையும், திருட்டு சம்பவத்தையும் ஏற்படுத்தி இருப்பார். இனி அவரால் அந்த நிகழ்வுகள் ஏற்படாது. அதாவது ராகு உங்கள் ராசிக்கு வந்துள்ளார். இதுவும் சுமாரான நிலைதான். இங்கு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்கள் முயற்சிக்கு பலன் இல்லாமல் போகலாம்.ராகுக்கு நேர் எதிரே இருக்கும் கேது, இதுவரை 8-ம் இடமான மேஷத்தில் இருந்து உடல் உபாதைகளை தந்திருக்கலாம். இப்போது அவர் 7-ம் இடமான மீனத்திற்கு வந்திருக்கிறார். இதுவும் உகந்த இடம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் எட்டாமிடத்தில் இருந்ததுபோல் கெடு பலன்கள் நடக்காது. 7-ல் கேது இருக்கும்போது மனைவி வகையில் பிரச்னைகளையும், அலைச்சலையும் தரலாம். மனவேதனை உருவாகலாம். எதிரிகளால் பிரச்னை வரத்தான் செய்யும். உடல் நலம் சுமாராக இருக்கும்.ராகு-கேது சாதகமாக இல்லையே என்பதற்காக கவலை கொள்ள வேண்டாம். இதனால் ஏற்படும் தடைகள், பிற்போக்கான நிலையை குரு பார்வையால் முறியடிக்கலாம். அதன்மூலம் பணம், பொருள் விரயம் தடுக்கப்படும். வீண்விவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம் பக்கத்தாரிடம் மதிப்பு கூடும்.குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் மனைவி வகையில் அவ்வப்போது கருத்துவேறுபாடு வரலாம். உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் வரத்தான் செய்யும். சற்று விலகி இருப்பது நல்லது. வீடு-மனை வாங்க சில காலம் பொறுத்திருப்பது நல்லது. சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். கேதுவால் சிற்சில உடல்நலபாதிப்புகள் வந்தாலும் மருத்துவத்தின் பேரில் மறைந்துவிடும்.
தொழில், வியாபாரம்: அதிகமாக உழைக்க வேண்டிஇருக்கும். பணவிஷயத்தில் யாரையும் நம்பி விட வேண்டாம். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். அரசிடம் இருந்து எதிர்பார்த்த கோரிக்கைகள் கிடைக்காமல் போகலாம். சிலருக்கு வெளியூர் பயணம் அனுகூலத்தை கொடுக்காது. குருவின் 7, 9-ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்திருப்பதால் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படமாட்டீர்கள். பண விஷயத்தில் கவனம் தேவை.
பணியாளர்கள்: வேலையில் இருந்து வந்த தடைகள், திருப்தியின்மை போன்றவை அடியோடு மறையும். வேலையில் புதிய தெளிவு பிறக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். பதவி உயர்வு கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.பத்திரிகையாளர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். இது வரை கிடைக்காத பாராட்டு, விருது போன்றவை வரும்.
அரசியல்வாதிகள்: எதிர்பார்த்த பலனைப் பெறலாம். மக்களிடையே நற்பெயர் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம்.
மாணவர்கள்: கல்வி ஆண்டு மிகச் சிறப்பானதாக அமையும். விரும்பிய பாடம் கிடைக்கப்பெறுவீர்கள். படிப்பில் பளிச்சிடுவீர்கள். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் யோகம் பெறுவர்.
விவசாயிகள்: அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரங்கள் சுமாராகத்தான் இருக்கும். சமரசபேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பது நல்லது.
பெண்கள்: மகிழ்ச்சியுடன் காணப்படுவர். அக்கம்பக்கத்தாரிடம் வளவள பேச்சு வேண்டாம். ஆடம்பரப்பொருள் வாங்குவதை தவிர்க்கவும். பிறந்த வீட்டில் இருந்து வெகுமதிகள் வரலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர்.
பரிகாரப்பாடல்!
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடை மேல் மிளிர்கொன்றை அணிந்தவனேமன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னை அல்லால் இனியாரை நினைக்கேனே.
விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்கி வாருங்கள். திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் போன்ற ஏதாவது ஒரு தலத்திற்கு சென்று வாருங்கள். அல்லது அருகில் இருக்கும் புற்றுள்ள கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வது நல்லது. சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமியை வணங்கி வாருங்கள்.
No comments:
Post a Comment