அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் பஞ்சலிங்க தரிசனம்
பஞ்சலிங்க தரிசனம்:முருகப்பெருமான்
சூரனை ஆட்கொண்டபின்பு தனது
வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன்
அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும்
தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல்
தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம்
இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். இதுதவிர முருகன்
சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை
மார்கழி மாதத்தில் தேவர்கள்
தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர,
தேவ மயில்களும்
மூலஸ்தானம் எதிரே உள்ளன.
No comments:
Post a Comment