குரு பெயர்ச்சி பலன்கள் (13.06.14 முதல் 04.07.15 வரை)ரிஷபம்:
(கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2) 60/100 பார்வையால் பலனுண்டு
பதவியில் சிக்கலுண்டு!
எதையும்
சாதிக்கும் வல்லமையுள்ள ரிஷப ராசிஅன்பர்களே!
கடந்த ஓர் ஆண்டாக குருபகவான்
உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருந்து
பல்வேறுநன்மைகளைத் தந்து கொண்டு இருந்தார்.
மனதில் துணிச்சல் பிறந்து உங்கள் ஆற்றல்
மேம்பட்டு இருக்கும்.இவ்வளவு நன்மைகளை தந்து
கொண்டிருந்த குரு, 2-ம் இடமான
மிதுனத்தில் இருந்து 3-ம் இடமான கடகத்துக்கு
வந்துள்ளார். இது சிறப்பான இடம்
என்று சொல்ல முடியாது. தீதிலாதொரு
மூன்றிலே துரியோதனன் படை மாண்டது என்பது
ஜோதிட வாக்கு. அதாவது துரியோதனனின்
ஜாதகத்தில் 3-ல் குரு இருக்கும்போது
அவனது படை தோல்வி அடைந்தது
என்பதாகும். அந்த அளவுக்கு மோசமான
பலன்கள் உங்களுக்கு நடக்குமோ என்ற அஞ்ச வேண்டாம்.
ஏனெனில், துரியோதனன் கதை வேறு. அவன்
பல அநியாயங்கள் செய்தவன். அந்த சூழ்நிலை வேறு,
இன்றைய உங்களின் நிலை வேறு. பொதுவாக
குரு 3-ம் இடத்தில் இருக்கும்போது
முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த
பதவி உயர்வு கிடைக்காது. உங்கள்
நிலையில் மாற்றம் ஏற்படும். அப்படியானால்,
குருவால் பிற்போக்கான பலன்கள்தான் நடக்குமோ என்று அஞ்ச வேண்டாம்.
காரணம் குரு சாதகமற்ற நிலையில்
இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக
உள்ளன. குருபகவான் தான் இருக்கும் இடத்தில்
இருந்து 5, 7, 9-வது வீட்டை பார்க்கிறார்.
குருவின் பார்வைக்கு கோடி நன்மை உண்டு.
எனவே குருவின் பார்வைகளால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
எதிர் இடையூறுகளை உடைத்தெறிவீர்கள். அதோடு நாம் மற்ற
கிரகங்களின் நிலையையும் கொண்டு பலனை கணக்கிட
வேண்டும். கேதுவால் எடுத்த காரியம் அனைத்தையும்
சிறப்பாக செய்து முடிக்கலாம். பொருளாதார
வளம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும்.
அதே நேரம் வீண்விவாதங்களில் தொடர்ந்து
ஈடுபடாமல் இருப்பது நல்லது. டிசம்பருக்கு பிறகு
எடுத்த காரியத்தில் சிறுசிறு தடைகள் வரலாம். சிலர்
ஆடம்பர பொருட்களை வாங்குவர். குடும்பத்தில் வசதிகள் மேம்படும். கணவன்-மனைவி இடையே சிறு
சிறு மனக்குழப்பங்கள் வரலாம். சுபநிகழ்ச்சிகள் குருவின்
பார்வையால் நடக்கும். சிலர் சற்று முயற்சி
எடுத்து புதிய வீடு கட்டுவர்.
அல்லது தற்போது இருப்பதை விட
வசதியான வீட்டிற்கு குடிபுகுவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சிலர் குடும்பத்தை வெளியூர் மாற்றும் நிலை உருவாகும்.
தொழில்,
வியாபாரம்: வீட்டில் சிற்சில பிரச்னைகள் இருந்தாலும்
தொழிலில் எந்த பின்னடைவும் இருக்காது.
நல்ல வளர்ச்சி இருக்கும். சிலர் வணிகம் விஷயமாக
வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை
ஏற்படும்.
கூட்டுத்தொழிலில் நல்ல வளத்தை காணலாம்.
வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெறுவர். ஜுன்,ஜூலை மாதத்தில்
அரசு அதிகாரிகளின் உதவியும், சலுகைகளும் கிடைக்கும்.
பணியாளர்கள்:
அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனாலும்,
அந்த பளுவுக்கும் உழைப்புக்கும் ஏற்ற வருமானம் இருக்கும்.
மேல் அதிகாரிகள் உங்களிடம் உரசினாலும் அனுசரித்து போகவும். சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வழக்கமான சம்பள உயர்வுக்கு எந்த
தடையும் இல்லை. நவம்பர்,டிசம்பர்
மாதத்தில் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு காண்பர்.
உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வசதிகள் பெருகும். பெண்கள்
மிகவும் ஆதரவுடன் இருப்பர். பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், வக்கீல்கள் நற்பெயரோடு பண வரவும் காண்பர்.
பெண்கள்:
குடும்பத்தில் அவ்வப்போது பூசல்கள் வரத்தான் செய்யும். அப்போது விட்டுக் கொடுத்து
போவது நல்லது. உங்கள் மூலம்
குடும்பம் சிறக்கும். புத்தாடை அணிகலன்கள் வாங்குவீர்கள். விருந்து, விழா என சென்று
வருவீர்கள். நவம்பர், டிசம்பர் மாதத்தில் குடும்ப பிரச்னை மறையும்.
எடுத்த காரியம் வெற்றி அடையும்.
சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக
இருப்பர்.
கலைஞர்கள்:
புதிய ஒப்பந்தங்களை பெற சற்று முயற்சி
எடுக்க வேண்டியது இருக்கும். பண வரவு குறையாது.
போட்டி பலமாக இருக்கும். ஜுன்,ஜூலை மாதத்தில்அரசிடம் இருந்து
விருது போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள்:
அரசியல்வாதிகளும் பொதுநல சேவகர்களும் ஓரளவே
பலன் பெற முடியும். முந்தைய
பதவி தொடர்பான
சிக்கல் வரலாம்.
மாணவர்கள்:
படிப்பில் சீரான வளர்ச்சி இருக்கும்.
குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால்
உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.
எனவேசுறுசுறுப்பை வரவழைத்து படியுங்கள்.
விவசாயிகள்:
சிலர் முயற்சி எடுத்து புதிய
சொத்து வாங்குவார்கள். நவீன விவசாயத்தை பயன்படுத்தி
விளைச்சலை பெருக்கலாம். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக
இருக்கும். தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம்.
கைவிட்டுப்போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
உடல்நலம்:
டிசம்பர் மாதத்தில் உஷ்ணம், பித்தம், மயக்கம்,
சளி போன்ற உபாதைகள் வரலாம்.
இந்த மாதம் சனிபகவான் இடம்
மாறுவதால், உங்கள் கையிருப்பு பணத்தை
நிரந்தர வைப்பு தொகையில் சேர்க்கவும்.
குரு அதிசார பலன்!
இந்த நிலையில் குருபகவான் டிசம்பர்
3-ந் தேதி அதிசாரம் பெற்று கடகத்திலிருந்துசிம்ம
ராசிக்கு மாறுகிறார். 22-ந் தேதி வரைஅதில்
இருப்பார் . இதனால் இந்த அதிசாரக்
காலத்தில் உங்களது ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்த
நிலை மாறும்.
துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும்.
தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின்
சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள்
சரண் அடையும் நிலை ஏற்படும்.
பரிகாரம்!
குரு பகவானுக்கு முல்லை மலர் மாலை
அணிவித்து அர்ச்சனை செய்யுங்கள். ராகு சிறப்பாக இல்லாததால்
அவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை செய்யுங்கள். டிசம்பர்16 முதல் ஆஞ்சநேயரை வணங்கி
வாருங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். காலையில் விநாயகரை வணங்குங்கள். முடிந்தால் பழநி சென்று வாருங்கள்.
மேலும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். ஏழை
குழந்தைகளுக்கு படிப்பதற்கு இயன்ற உதவியைச் செய்யவும்.
பரிகாரப்பாடல்!
மூவிரு
முகங்கள் போற்றி முகம்பொழி கருணை
போற்றிஏவரும் துதிக்க நின்ற ஈராறு
தோள் போற்றி காஞ்சி மாவடி
வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி அன்னான்சேவலும்
மயிலும் போற்றி திருக்கை வேல்
போற்றி போற்றி
No comments:
Post a Comment