குரு பெயர்ச்சி பலன்கள் (13.06.14 முதல் 04.07.15 வரை)மிதுனம்:
(மிருகசீரிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) 75/100 (பெரிய லாபம் சிறிய
பிரச்னைகள்!
மதி நுட்பத்துடன் பணியாற்றும் மிதுன ராசிஅன்பர்களே!
உங்கள்
ராசியில் இருந்த குரு பகவான்
குடும்பத்தில் பல பிரச்னைகளை உருவாக்கி
இருப்பார். சிலர் குடும்பத்தை விட்டு
பிரியும் நிலை கூட ஏற்பட்டிருக்கும்.
இந்த நிலையில் இப்போது குரு பகவான்
உங்கள் ராசியை விட்டு 2-ம்
இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது மிகவும் உகந்த
நிலை. வாழ்வில் எண்ணற்ற நன்மைகள் படிப்படியாக
கிடைக்கும். உங்களது ஆற்றல் மேம்படும்.
இதுவரை இருந்த மந்த நிலை
மாறும். மனதில் துணிச்சல் பிறக்கும்.
பண வரவு கூடும். தேவையான
பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் மறைமுக சூழ்ச்சி இனி
உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும்
நிலையும் உருவாகும். குருபகவான்
மட்டுமின்றி முக்கிய கிரகங்களான சனி
பகவானும் சாதகமாக இருப்பதால் முன்னேற்றத்துக்கு
எளிதில் வழி காணலாம். இந்த
நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பொருளாதார வளம் சிறப்படையும். தேவை அனைத்தும்
பூர்த்தியாகும். எடுத்த காரியத்தை சிறப்பாக
செய்து முடிக்கலாம். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும்.
உங்கள் செல்வாக்கு மேம்படும். அக்கம் பக்கத்தினர்
பெருமையாகப் பேசும் விதத்தில் செயல்படுவீர்கள்.
பல ஆண்டுகளாக தடைபட்டு வந்த திருமணம், கிரகப்பிரவேசம்
போன்ற சுப நிகழ்ச்சி கைகூடும். அதுவும் நல்ல வரனாக
அமையும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் விரைவில்
கிட்டும். புதிய வீடு கட்டுவர்.
அல்லது தற்போதுள்ள வீட்டை விட நல்ல
வசதி மிகுந்த வீட்டிற்கு குடிபுகவும்
வாய்ப்புண்டாகும். உறவினர் வருகையால் நன்மை
கிடைக்கும். பெண்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களால்
நற்சுகம் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.
பொருளாதார வளம் மேம்படும். வீடுமனை
வாங்கலாம்.
தொழில்,
வியாபாரம்: தொழிலதிபர்கள், வியாபாரிகள் உற்சாகத்துடன் செயல்படுவர். கடந்த காலத்தை விட
வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும். டிசம்பருக்கு பிறகு புதிய தொழிலை
தொடங்கலாம். அதில் நல்ல வருமானம்
கிடைக்கும். தொழிலாளர்களின் ஆதரவும் நல்ல விதத்தில்
அமையும். சிலர் வேலை விஷயமாக
வெளிநாடு சென்று வருவீர்கள். கூட்டாளிகளிடையே
ஒற்றுமை ஏற்படும். வாடிக்கையாளர்கள் உங்களிடம் நன்மதிப்பை வைத்திருப்பர். அரசிடம் எதிர்பார்த்த உதவிகள்
கிடைக்கும்.
பணியாளர்கள்:
பணியாளர்கள் கடந்த காலத்தில் மந்த
நிலையில் இருந்திருப்பீர்கள். அந்த பிற்போக்கான நிலையில்
இருந்து விடுபடுவர். வேலையில் இருந்த வெறுப்புணர்வு மாறி
ஆர்வம் பிறக்கும். வேலையில் திருப்தியும், தன்னம்பிக்கையும் பிறக்கும். வேலைப்பளு வெகுவாக குறையும். புதிய
பதவி வர வாய்ப்பு உண்டு.
சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர்.
சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு
கிடைக்கும். சம்பள உயர்வு வரும்.
விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம்.
கோரிக்கைகள் நிறைவேறும். படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். 2015-ஏப்ரல்,மே மாதத்தில் பெண்களின்
ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு.
அரசு வகையில் நன்மை உண்டாகும்.
போலீஸ், ராணுவத்தினர் சிறப்பான நிலையில் இருப்பர்.
பெண்கள்: வாழ்வில்
நல்ல முன்னேற்றம் அடைவர். விரும்பிய விதத்தில்
புத்தாடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.
குடும்பத்தில் ஆனந்தமும், மகிழ்ச்சியும் நிலவும். வீட்டுக்கு தேவையான வசதி அதிகரிக்கும்.
தம்பதியிடையே பாச உணர்வு மேம்படும். விருந்து,
விழா என அடிக்கடி சென்று
வருவீர்கள். வேலைக்குச்
செல்லும் பெண்கள் உயர்நிலையை அடைவர்.
நவம்பர் மாதத்தில் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். மனதில் சோர்வும் ஏற்படும்.
குடும்பத்தில் சுப நிகழ்ச்சி சிறப்பாக
நடக்கும். பணிபுரியும் பெண்களுக்கு பணியில் உயர்வு கிடைக்கும்.
உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
கலைஞர்கள்:
பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். புதிய
ஒப்பந்தம் தாராளமாக கிடைக்கும். பண வரவு சிறப்பாக
இருக்கும். புகழ், பாராட்டு வந்து
சேரும்.
அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள்,
சமூகநல சேவகர்கள் வாழ்வில் நற்பெயர், புகழ் கிடைக்கப் பெறுவர்.
நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி
கிடைக்கும்.
மாணவர்கள்: இந்த
ஆண்டு சிறப்பான பலனை காணலாம். கல்வியில்
நல்ல வளர்ச்சி ஏற்படும். நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
போட்டிகளில் வெற்றி கிடைக்கப் பெறுவர்.
விரும்பிய பாடம் கிடைக்கும். வெளிநாடு
சென்று படிக்க வாய்ப்பும் சிலர்
பெறலாம்.
விவசாயிகள்:
முன்னேற்றமான பலனை காணலாம். புதிய
சொத்து வாங்க யோகமுண்டு. விளைபொருளுக்கு
நல்ல விலை கிடைக்கப் பெறுவர்.
நவீனக்கருவிகள் மூலம் பணியை மேம்படுத்துவர்.
உடல்நலம்: உடல்நிலை
சீராக இருக்கும். கேதுவால் பித்தம், மயக்கம் தொடர்பான உபாதை
உண்டாகும். ஆனால் பெரிய பாதிப்பு
இருக்காது.
குரு அதிசார பலன்!
குரு பகவான் டிச. 3ல்
அதிசாரம் பெற்று சிம்ம ராசிக்கு
மாறுகிறார். டிச.22 வரை அதில்
இருப்பார். இதனால் இந்த காலத்தில்
வீண் சண்டை, சச்சரவு உண்டாகும்
என்றும், மந்த நிலை ஏற்படும்
என்றும் பொதுவாக கூறப்படுவதுண்டு. சற்று
பொறுமையாகவும், விட்டு கொடுத்தும் போவது
நன்மையளிக்கும். முயற்சியில் தடங்கலும் குறுக்கிடும். எந்த செயலையும் விடாமுயற்சியுடன்
செய்ய வேண்டியிருக்கும்.
பரிகாரம்!
ராகு, கேது சாதகமற்ற நிலையில்
உள்ளனர். சந்தர்ப்பம் கிடைக்கும்போது அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை அம்மனை எலுமிச்சை விளக்கேற்றி
வழிபடுங்கள். பவுர்ணமியன்று விளக்கு ஏற்றி சிவபெருமானை
வணங்குங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.
பத்திரகாளியம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள். ஆதரவற்ற
மூதாட்டிக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.
பரிகாரப்பாடல்!
மண்ணில்
நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்எண்ணில்
நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைகண்ணில்
நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்பெண்ணில் நல்லாளொடும்
பெருந்தகை இருந்ததே.
No comments:
Post a Comment