Monday 9 June 2014

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில் தல வரலாறு:


சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில் தல வரலாறு:    
                         

            மாமுனிவர் அத்ரியும், கற்புக்கரசியாகிய அனுசூயாவும் ஞானாரண்யம் என்னும் பழம் பெயர் பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர். ஒரு சமயம் அத்ரி முனிவர் இமயமலை சென்ற போது அயன், அரி, அரன் மூவரும் அனுசூயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து ஆசிரமம் வந்து உணவு கேட்டனர். அனுசூயாவும் உணவு படைக்க ஆரம்பிக்க, ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது என்று மூவரும் கூறினர். திடுக்கிட்ட அனுசூயாதேவி தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளிக்க பச்சிளங்குழந்தைகளாக மாறினர். பின்பு உணவூட்டி தொட்டிலிட்டு தாலாட்டி தூங்க செய்தாள். சிறிது நேரங்கழித்து மூவரின் தேவியரும் வர, அனுசூயா மூவர்க்கும் பழைய உருவை கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்ரி முனிவரும் அனுசூயையோடு அகமிக மகிழ்ந்தவராய் மும்மூர்த்திகளின் காட்சி பெற்றனர். இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டு முப்பெரும் கடவுளரும் வழிபடப் பட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer